மீண்டும் ஒருபோதும் பசியோடு இருக்க மாட்டாய் : கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்

0
194

ரஷ்யாவை சேர்ந்த 28 வயதான யூலியா கபிடோவா உணவு இல்லை என்பதற்காக தனது ஒரு வயது மகனை கொலை செய்த சம்பவம் ரஷ்யாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனது ஒரு வயது நிரம்பிய மகனை எவ்வாறு கொலை செய்தார் என்பது பற்றி யூலியா கபிடோவா பொலிஸாருக்கு வாக்கு மூலுத்தில் தெரிவித்துள்ளார்.

கணவரை பிறிந்து தனது ஒரு வயது மகனுடன் தனிமையில் வாழும் இவர் சில நாற்களாகவே பெரும் சிரமத்தின் மத்தியில் வாழ்க்கை நடத்தி உள்ளார்.

வீட்டில் உணவு பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் கையில் இருந்த பணமும் செலவாகி இருந்தது.

தொடர்ந்து பசியுடன் இருந்த தமது குழந்தைக்கு கொடுப்பதற்கு உணவு எதுவும் இல்லை என்பதனால் ‘பரவாயில்லை, நீ மீண்டும் ஒருபோதும் பசியோடு இருக்க போவதில்லை. நீ மீண்டும் அழமாட்டாய். ‘ என கூறி குழந்தையின் கழுத்தை கயிற்றால் நெரித்துக் கொண்டதாக கண்ணீருடன் ஒப்புக்கொண்டாள்.

அதன் பின்னர் மண்வெட்டியைக் கொண்டு ஒரு கல்லறையைத் தோண்டி, அதனுள் போர்வையாள் சுற்றப்பட்ட குழந்தையின் உடலை புதைத்துள்ளார்.

இஸ்மாயிலோவோ கிராமத்தில் உள்ள மயானத்தில் குழந்தையின் உடலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

யூலியா கபிடோவா தனது மகனை வேண்டுமென்றே கொலை செய்தார். இவர் ‘ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் எட்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.