“தரிசனமானது கடவுளைப் போன்ற மனிதருடன் சரியாக முடிந்தது”; ரஜினி குறித்து த்ரிஷா வெளியிட்ட கருத்து

0
181

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர்  வெளியானதையடுத்து, அதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அதில் இடம்பெற்றிருந்த பின்னணி இசை, ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்’ படத்தின் தீம் இசையினை ஒத்திருப்பதாக இணையத்தில் பல வீடியோக்கள் பரவி வருகின்றன.

ரஜினிகாந்துக்காக அனிருத் இசையமைத்திருக்கும் முதல் படம் ‘பேட்ட’ ஆகும்.

42068867_1006628406190424_5771677314140766163_n-819x1024இதனிடையே சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான ஸ்டுடியோவில் ‘பேட்ட’ ஷூட்டிங் நடைபெற்று வருவதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

இதன்போது படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா சிம்ரன், பொலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இதற்கிடையில் நடிகை த்ரிஷா அவருடை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படமொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் த்ரிஷா மற்றும் ரஜினி “காசி விஸ்வநாத கோவில்” க்கு தரிசனத்திற்காக சென்றுள்ளனர்.

அப்படத்தை வெளியிட்டு அவர் குறிப்பிட்டதாவது “ தரிசனமானது கடவுளைப் போன்ற மனிதருடன் சரியாக முடிந்தது ” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.