மாமனாரின் பாலியல் தொல்லை.. கம்பியால் அடித்தே கொன்ற மருமகள்.. தடுக்க வந்த மாமியாரும் பலி!

0
341

பெங்களூரு: மாமனாருக்கு மருமகள் மீது கொள்ளை ஆசை.. அதனால் பல வழிகளில் பாலியல் தொல்லை தந்த மாமனாரை இரும்பு கம்பி எடுத்து போட்டு தள்ளிவிட்டார் மருமகள்.

அதை தடுக்க வந்த மாமியாரையும் அடித்தே கொன்றுவிட்டார். கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், ஜம்பகிகேடி கிராமத்தை சேர்ந்த தம்பதி சித்தராய மல்லேஷ்வரா – கலாவதி.

இவர்களது மருமகள்தான் கீதா. சித்தராய மல்லேஷ்வராவுக்கு 56 வயசாகிறது. கலாவதிக்கு 45 வயசாகிறது.

இந்நிலையில் மாமனாருக்கு கீதா மேல் ஒரு கண் இருந்து கொண்டே இருந்திருக்கிறது. அதனால் தினந்தோறும் பாலியல் தொல்லை தந்து வந்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் மாமனாரின் தொல்லையில் இருந்து தப்பி பிழைப்பதும், அவஸ்தை படுவதுமே கீதாவின் பிழைப்பாகி விட்டது.

கொஞ்ச நாளைக்கு முன்னாடிகூட, பெட்ரூமில் கீதா டிரஸ் மாற்றி கொண்டிருந்தபோது, படக்கென உள்ளே புகுந்து, கற்பழிக்கவே முயன்றுவிட்டாராம்.

இந்த சம்பவத்துக்கு பிறகு கீதா ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளார். மன ரீதியான உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளார்.

கணவனிடமும் எதுவும் சொல்லாமல் தவித்து வந்துள்ளார். இதுவரை எவ்வளவு பாலியல் தொல்லை தந்தும், மகனிடம் மருமகள் புகார் சொல்லாமல் இருப்பதை மாமனாருக்கு ரொம்பவும் வசதியாக போய்விட்டது.

அதனால் எப்படியும் மகனிடம் எதுவும் மருமகள் சொல்ல வாய்ப்பில்லை என்று நம்பிக்கொண்டு, மருமகளை கற்பழிப்பதிலேயே நோக்கமாக இருந்துள்ளார்.

அதற்கு கீதா பலமாக எதிர்ப்பு காட்டினாலும், கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என்று இம்சை தந்திருக்கிறார்.

நேற்று காலையும் வீட்டில் யாருமில்லாத நேரத்தில், கீதாவை சீரழிக்க முயன்றுள்ளார் மாமனார்.

இதில் ஆத்திரமும், பொறுமையும் இழந்த கீதா, வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மாமனாரின் தலையில் ஓங்கி அடித்தார்.

கொஞ்சமும் எதிர்பார்க்காத மாமனார், நிலைதடுமாறி அலறியபடியே கீழே விழுந்தார். இந்த சத்தத்தை கேட்டு வெளியில் சென்றிருந்த மாமியார் வீட்டுக்குள் பதறியபடியே வந்தார்.

அப்போது கீதாவை தடுக்க முயன்றதால், மாமியாரையும் ஆவேசமாக தாக்கினார். இதில் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சவலகி போலீசார் விரைந்து வந்து சடலங்களை மீட்டு, கீதாவையும் கைது செய்தனர்.

அப்போது, மாமனாரின் பாலியல் தொல்லை தாங்காமல்தான் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார் கீதா.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.