யாழில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய சம்பவம்

0
256

தாயக மக்கள் மட்டுமன்றி நாட்டிற்கு செல்லும் நம் புலம்பெயர் மக்களும் மிகவும் விரும்பி உண்கின்ற பழங்களில் வெள்ளரிப்பழமும் ஒன்று.

கோடை காலத்தில் மட்டுமே அது கிடைக்கக்கூடியது. சர்க்கரை அல்லது வெல்ல சேர்த்து உண்ணும்போது அதன் ருசியே தனிதான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதனை விரும்பி உண்பார்கள்.

அதோடு எங்களின் முன்னோர்களின் போக்குவரத்து வாகனமாக இருந்த மாட்டுவண்டியை பார்ப்பதே தற்பொழுது பெரிய விடயம். வெள்ளரிபழம் விற்கும் வியாபாரிகள் மட்டுமே காளைமாடு பூட்டிய வண்டியில் தெருத்தெருவாக சென்று பழவிற்பனையில் ஈடுபடுவார்கள்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் ஓட்டுமடம் வீதியில் வெள்ளரிபழ விற்பனையில் ஈடுபடும் ஒருவரையே இங்கு காண்கின்றீர்கள்.

இன்று பல வாகனங்கள் மூலம் வியாபாரம் இடம் பெறும் நிலையில் தமிழர் பாரம்பரியத்தை மறக்க முடியாத விற்பனை முறை பார்ப்பவர் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

vellari_jaffna_02vellari_jaffna_01

 

 

LEAVE A REPLY

*