சஜித்தை வேட்­பா­ள­ராக்­கு­மாறு கோரி 25 எம்.பி. க்கள் கைச்­சாத்து: மங்­களவின் வீட்டில் மந்­தி­ரா­லோ­சனை; மேலும் கையெ­ழுத்­துக்­களை பெற ஏற்­பாடு

0
109

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியில் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு வழங்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பங்­கேற்ற முக்­கிய சந்­திப்­பொன்று நேற்று முன்­தினம் இரவு கொழும்பில் இடம்­பெற்­றுள்­ளது.

நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் இல்­லத்தில் நடை­பெற்ற இந்த சந்­திப்பில் சஜித் பிரே­ம­தாஸ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி கையெ­ழுத்­துக்­களை பெறும் நட­வ­டிக்கை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி இது­வரை ஐக்­கிய தேசிய கட்­சியின் 25 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இவ்­வாறு சஜித் பிரே­ம­தா­சவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­க­வேண்டும் என்று கையெ­ழுத்­துக்­களை இட்­டுள்­ளனர்.

மேலும் சஜித்­துக்கு ஆத­ரவு வழங்கும் உறுப்­பி­னர்­க­ளிடம் கையெ­ழுத்­துக்­களை பெற்று அந்த ஆவ­ணத்தை கட்­சியின் தலை­மை­யி­டமும் சபா­நா­ய­க­ரி­டமும் கைய­ளிப்­ப­தற்கு சஜித் தரப்பு எதிர்­பார்ப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஏற்­க­னவே செயற்­கு­ழு­வையும் பாரா­ளு­மன்ற குழு­வையும் கூட்டி ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­விக்­க­வேண்டும் என்று 55 பேர் அளவில் கை்சாத்­திட்டம் கடிதம் கட்­சியின் தலை­மைக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

தற்­போது சஜித்தை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக்­க­வேண்டும் என்று நேர­டி­யாக கோரும் வகையில் 25 கையெ­ழுத்­திட்­டுள்­ளனர். மேலும் பல­ரிடம் கையெ­ழுத்­துக்­களை பெறவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இது இவ்­வாறு இருக்க ௪ஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு வரு­கின்ற அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மங்­கள சம­ர­வீ­ரவின் இல்­லத்தில் நடை­றெ்ற இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்டு நீண்­ட­நேரம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர்.

எதிர்­வரும் 5ஆம் திகதி சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­க­வேண்­டு­மெனக் கோரி குரு­ணா­கலில் நடத்­தப்­ப­ட­வுள்ள கூட்டம் தொடர்­பிலும் இந்தப் பேச்­சு­வார்த்­தையின் போது ஆரா­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

இதன்­போது சஜித் பிரே­ம­தா­சவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக்கும் வியூ­கங்கள் தொடர்பில் நீண்­ட­நேரம் மந்­தி­ரா­லோ­சனை நடத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­கின்­றது. மாற்று வழிகள் தொடர்­பா­கவும் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு பகி­ரங்­க­மாக ஆத­ரவு வழங்­கி­வரும் அமைச்­சர்­க­ளான அஜித் பி பெரேரா, சுஜீவ சேன­சிங்க ஆகி­யோ­ருக்கு எதி­ராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் பகிரங்கமாக கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றார்.

இந்த நிலையிலேயே அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கும் எம்.பி.க்களின் இந்த சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*