கெத்தா பறந்து வரா’…’பலரையும் வாய்பிளக்க வைத்த பள்ளி மாணவி’…அசந்து போன வீராங்கனை… வைரலாகும் வீடியோ

0
142

பள்ளி மாணவி ஒருவர் துளியும் பயமில்லாமல் பல்டி அடித்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. சிறுமியின் வீடியோவை பார்த்து பிரபல ஜிம்நாஸ்டிக் வீராங்கனை நாடியா பாராட்டியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் பள்ளி சிறுமி ஒருவர், பல்டி அடிக்கும் வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவில் எந்த பள்ளியில் நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அந்த சிறுமிக்கு உதவ தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் ஒலிம்பிக் புகழ் பிரபல ஜிம்நாஸ்டிக் வீராங்கனை நாடியா, அந்த வீடியோவை ஷேர் செய்து சிறுமியை பாராட்டியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.