மோடியின் ஆங்கில பேச்சு பற்றி கமெண்ட் அடித்த ட்ரம்ப்.. கையை பிடித்து மோடி ஜாலி பளார்.. வைரல் வீடியோ

0
303

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் இந்த முறை ஜி-7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியா, ஆஸ்திரேலியா, சிலி உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க்கும் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு இன்று நிகழ்ந்தது.

அப்போது இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, நிருபர்களின் ஆங்கில கேள்விகளுக்கும், பிரதமர் மோடி, ஹிந்தியில் பதில் அளித்தார் மோடி.

சில கேள்விகள் வரை பொறுமை காத்த, ட்ரம்ப், திடீரென ஒரு கமெண்ட் அடித்தார். “உண்மையில், மோடி என்னைவிட சிறப்பாக இங்கிலீஷ் பேசுவார்.

ஆனால், அவர் பேசுவதுதான் இல்லை” என்றார் ட்ரம்ப். இதனால், மோடிட உட்பட அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

இதையடுத்து, தனது கையை மோடியை நோக்கி சிரித்தபடி கொண்டு சென்றார், ட்ரம்ப். அதை தனது இடதுகையால் தடுத்து பிடித்துக் கொண்ட மோடி, வலது கையை எடுத்து, ட்ரம்ப்பின் கையில் ஓங்கி பிரெண்ட்லியாக அடித்தபடி சிரித்தார்.

மோடி, ட்ரம்ப் கையில் அடித்த சத்தம், ஏதோ டீச்சர் மாணவர் கையில் பிரம்பால் அடித்ததை போல கொஞ்சம் சத்தமாகவே கேட்டது. இருப்பினும் ட்ரம்ப்புக்கு வலிக்கவில்லை போலும். சிரித்தபடி இருந்ததை கவனிக்க முடிந்தது.
சிரிப்பலை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் மோடி இவ்வாறு ஜாலியாக பேசியதையும், கையில் அடித்ததையும் பார்த்த கேள்வி கேட்ட பெண் நிருபரால் தனது கேள்வியை முடிக்க முடியவில்லை.

அவர் தனது கேள்வியை தொடரும்போதே, சிரிப்பு வந்துவிட்டது. இவ்வாறு அந்த இடமே கலகலப்பாக மாறியது. அந்த வீடியோ இப்போது வைரலாக சுற்றத் தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.