திரி­சங்கு நிலையில் மஹிந்த! – என்.கண்ணன் (அரசியல் கட்டுரை)

0
186

சமல் ராஜபக் ஷவே, மஹிந்த ராஜபக் ஷவின் தெரி­வாக இருப்பார் என்று அர­சியல் மட்டத்தில் எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ராஜபக் ஷவி­னரில், குற்­றச்­சாட்­டுகள் இல்­லா­தவர், கறை­ப­டி­யா­தவர் என்ற வகையில் சமல் ராஜபக் ஷவையே இட­து­சாரிக் கூட்­டா­ளி­களும் விரும்­பி­னார்கள்.

ஆனால், ஒரு கட்­டத்தில்,

கோத்­தா­பய ராஜபக் ஷவை வேட்­பா­ள­ராக நிறுத்­து­வ­தற்­கான அழுத்தம் பெரி­ய­தொரு வெடிப்­பாக நிகழ்ந்­தது.

குறிப்­பாக, 21/4 தாக்­கு­தல்கள், ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான பிர­சா­ரத்தை தேசிய பாதுகாப்பை மையப்­ப­டுத்­தி­ய­தாக மாற்றி விட்­டன

பல­ராலும் எதிர்­பார்க்­கப்­பட்­டது போலவே, இன்னும் பலர் எதிர்­பார்க்­காத வகையில், பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கோத்­தா­பய ராஜபக் ஷ அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்ளார்.

நான்­கா­வது கட்ட ஈழப்போர், மாவி­லாற்றில் தொடங்­கி­ய­தாக கரு­தப்­பட்­டாலும், அது முழு அள­வி­லான போராக வெடித்­தது முக­மா­லையில் தான்.

2006 ஓகஸ்ட் 11ஆம் திகதி மாலை 5 மணிக்கு சற்று முன்­ன­தாகத் தான், அந்தச் சமர் வெடித்­தது.

அதே ஓகஸ்ட் 11ஆம் திகதி கிட்­டத்­தட்ட போர் தொடங்­கிய நேரத்தை அண்­மித்­த­தாக- மாலை 4 மணி­ய­ளவில் கோத்­தா­பய ராஜபக் ஷவின் பெயரை அறி­வித்தார் மஹிந்த ராஜபக் ஷ.

முக­மா­லையில் போர் வெடித்த நாள் ராஜபக் ஷவி­ன­ருக்கு முக்­கி­ய­மான நாள். ஏனென்றால், அது தான், அவர்­களை சிங்­கள மக்கள் மத்­தியில் கதா­நா­ய­கர்கள் ஆக்கியது.

முக­மா­லையில் வெடித்த அந்தப் போரின் தொடர்ச்­சி­யாகத் தான், முள்­ளி­வாய்க்கால் இறு­திப்போர் நிகழ்ந்­தது.

கோத்­தா­பய ராஜபக் ஷவின் பெயரை இப்­ப­டி­யொரு நாள், நேரம் பார்த்து மஹிந்த ராஜபக் ஷ வெளி­யிட்­டி­ருப்பார் என்று கரு­து­வ­தற்­கில்லை.

மஹிந்த ராஜபக் ஷ சோதி­டர்­களின் மீது அதிக நம்­பிக்கை கொண்­டவர் என்­பதால், அவர்­களின் ஆலோ­ச­னைப்­ப­டியே அவர் முடிவை எடுத்­தி­ருப்பார்.

ஆனாலும், இவ்­வா­றான ஒரு நாளில் கோத்­தா­பய ராஜபக் ஷவின் பெயர் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பெய­ரி­டப்­பட்­டி­ருப்­பது தற்­செ­ய­லா­ன­தாக இருக்­காது.

ஓகஸ்ட் 11இல் முக­மா­லையில் தொடங்­கிய போர், முள்­ளி­வாய்க்­காலில் ராஜபக் ஷ வின­ருக்கு முற்­றிலும் சாத­க­மாக முடிந்­தது போன்று, இந்த ஓகஸ்ட் 11இல் கோத்­தா­பய ராஜபக் ஷ ஆரம்­பித்­துள்ள அர­சியல் அதி­கா­ரத்­துக்­கான போர், ராஜபக் ஷவி­ன­ருக்கு சாத­க­மாக முடி­யுமா என்­பதைப் பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும்.

கோத்­தா­பய ராஜபக் ஷவை ஜனா­தி­பதித் தேர்­தலில் நிறுத்தும் முடிவை மஹிந்த ராஜபக் ஷ விரும்­பியே எடுத்­தாரா அல்­லது சூழ்­நிலைக் கைதி­யாக அந்த முடி­வுக்கு வந்­தாரா என்ற கேள்­விக்கு இன்­னமும் விடை­யில்லை.

ஏனென்றால், ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியின் தரப்பில் கடு­மை­யான உள்­மோ­தல்கள் நிகழ்ந்து வந்­தன.

ஒரு பக்­கத்தில், ராஜபக் ஷ குடும்­பத்­துக்குள் யாரை நிறுத்­து­வது என்ற பிரச்­சினை. பொது­ஜன ஐக்­கிய முன்­னணி மற்றும் பங்­கா­ளி­க­ளுக்குள் நில­விய, பொருத்­த­மான வேட்­பாளர் யார் என்ற பிரச்­சினை.

தினேஸ் குண­வர்த்­தன போன்ற மூத்த தலை­வர்­களை நிறுத்­தலாம் என்று குமார வெல்­கம போன்­ற­வர்கள் மோதிக் கொண்­டி­ருக்க, இன்­னொரு பக்­கத்தில், ராஜபக் ஷ குடும்­பத்­துக்குள், கோத்­தாவா, சமலா, ஷிரந்­தியா என்ற மோத­லுக்குள் மூழ்­கி­யி­ருந்­தனர்.

அந்த மோதல்கள் ஒரு கட்­டத்தில் வேட்­பாளர், ராஜபக் ஷ குடும்­பத்தை சேர்ந்­தவர் தான் என்று சுருங்­கி­யது. அப்­போதும், இரு­முனை யுத்தம் நடந்து வந்­தது.

தனது சகோ­த­ரர்­களில் இருந்து, கோத்­தா­பய ராஜபக் ஷவை மஹிந்த ராஜபக் ஷ வேட்பா­ள­ராக தெரிவு செய்­ததில், செல்­வாக்குச் செலுத்­திய காரணி ஆரா­யப்­பட வேண்டி­யது.

மஹிந்த ராஜபக் ஷவுக்கும், சமல் ராஜபக் ஷ மற்றும் பசில் ராஜபக் ஷவுக்கும் இடையில் இருக்­கின்ற அந்­நி­யோன்யம், மஹிந்­த­வுக்கும் கோத்­தா­வுக்கும் இல்லை என்­பது பொது­வாக கூறப்­படும் கருத்து.

Screen-Shot-2015-07-03-at-8.06.18-AMசமல் ராஜபக் ஷ

எனவே, சமல் ராஜபக் ஷவே, மஹிந்த ராஜபக் ஷவின் தெரி­வாக இருப்பார் என்று அரசியல் மட்­டத்தில் எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ராஜபக் ஷவி­னரில், குற்­றச்­சாட்­டுகள் இல்­லா­தவர், கறை­ப­டி­யா­தவர் என்ற வகையில் சமல் ராஜபக் ஷவையே இட­து­சாரிக் கூட்­டா­ளி­களும் விரும்­பி­னார்கள்.

ஆனால், ஒரு கட்­டத்தில், கோத்­தா­பய ராஜபக் ஷவை வேட்­பா­ள­ராக நிறுத்­து­வ­தற்­கான அழுத்தம் பெரி­ய­தொரு வெடிப்­பாக நிகழ்ந்­தது.

குறிப்­பாக, 21/4 தாக்­கு­தல்கள், ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான பிர­சா­ரத்தை தேசிய பாதுகாப்பை மையப்­ப­டுத்­தி­ய­தாக மாற்றி விட்­டன.

ஏற்­க­னவே புலி­களைத் தோற்­க­டிப்­பதில் முக்­கிய பங்­காற்­றி­யவர் என்று சிங்­கள மக்களால் போற்­றப்­படும், கோத்­தாவே, இதற்குப் பொருத்­த­மா­னவர் என்ற நிலை உருவா­னது.

இது தானா­கவே உரு­வா­னதா- திட்­ட­மிட்டு உரு­வாக்­கப்­பட்­டதா? என்­பது மர்­ம­மா­கவே உள்­ளது.

ஆனால், 21/4 தாக்­கு­தல்கள் கோத்­தாவை, வேட்­பா­ள­ராக நிறுத்­து­வதில் கணி­ச­மான செல்­வாக்கைச் செலுத்­தி­யி­ருக்­கி­றது என்­பதில் ஐய­மில்லை.

gothAaஅவ்­வா­றாயின், அதற்கு முன்­ன­தாக கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு அர­சியல் இலக்கு, எதிர்­பார்ப்­புகள் இருக்­க­வில்­லையா?

நிச்­ச­ய­மாக இருந்­தது. அதி­கா­ரம்­மிக்க ஒரு அரச அதி­கா­ரி­யாக பணி­யாற்றி விட்ட கோத்தா­வுக்கு, அடுத்து அர­சியல் செல்­வாக்­குள்ள ஒரு­வ­ராக மாற வேண்டும் என்ற கனவு இருந்­தது.

19 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் மூலம்- மஹிந்த ராஜபக் ஷவுக்கு மீண்டும் ஜனா­தி­பதி கதவு அடைக்­கப்­பட்­ட­போது, 2019 ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான கதவு நாமல் ராஜபக் ஷவுக்கு மூடப்­பட்ட போது, தனக்­கான அர­சியல் வாய்ப்பு ஒன்று தானா­கவே உரு­வாகும் என்று கோத்­தா­பய ராஜபக் ஷ கணித்­தி­ருந்தார்.

அவர் அதனை வெளிப்­ப­டை­யாக கூற­வில்லை. ஆனாலும், அந்த வெளியை நிரப்பிக் கொள்­வ­தற்­கான ஒரு தளத்தை உரு­வாக்கத் தொடங்­கி­யி­ருந்தார்.

எலிய, வியத்­மக போன்ற அமைப்­பு­களை உரு­வாக்கி, துறைசார் வல்­லு­னர்கள் என்ற பெயரில், முன்னாள் படை அதி­கா­ரிகள், சிங்­கள கடும்­போக்­கா­ளர்­களை ஒருங்கிணைத்து, நாட­ளா­விய ரீதி­யாக பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்து வந்தார்.

நாட்டை பாது­காக்­கவும், அபி­வி­ருத்தி செய்­யவும், அர­சி­ய­லுக்கு அப்­பாற்­பட்ட, அர்ப்­ப­ணிப்­புள்ள, செயற்­தி­றமை வாய்ந்த ஒரு தலைமை அவ­சியம் என்­பது இந்தக் கருத்­த­ரங்­கு­களில் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இதன் மூலம், கோத்­தா­பய ராஜபக் ஷவே, அடுத்த ஜனா­தி­ப­தி­யாகும் தகைமை பெற்­றவர் என்ற கருத்து சிங்­கள மக்­க­ளி­டமும், முன்னாள் படை­யினர், கடும்­போக்கு சிங்­க­ள­வர்­க­ளி­டமும் விதைக்­கப்­பட்­டது.

21/4 தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்னர், இந்தக் கருத்து மேலும் வலுப்­பெற்­றது. அது பர­வ­லாக சிங்­கள மக்­களின் வர­வேற்பைப் பெற்­ற­தா­கவும் மாறி­யது.

இவ்­வா­றான ஒரு சூழலில் மஹிந்த ராஜபக் ஷ, தனது விருப்­பத்­துக்­கேற்ற – தன்­னுடன் ஒத்­துப்­போகக் கூடிய- தனதும், தனது மகனின் அர­சியல் அபி­லா­ஷைக்கும் இடை­யூறு விளை­விக்­காத ஒரு­வரை வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்ய முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்டார்.

_105685643_14490a4f-b53f-4ff1-8bfa-bf01bb1b65f1மஹிந்த ராஜபக் ஷவை வைத்து, பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியை உரு­வாக்­கி­ய­வர்கள், அவ­ரது செல்­வாக்­கையும், விம்­பத்­தையும் வைத்தே அந்தக் கட்­சி­யையும் தம்­மையும் பலப்­ப­டுத்திக் கொண்­ட­வர்­களே, ஒரு கட்­டத்தில், மஹிந்த ராஜபக் ஷ மீது அதி­காரம் செலுத்தத் தொடங்­கினர்.

கோத்­தா­வையே வேட்­பா­ள­ராக நிறுத்த வேண்டும் என்றும், தமது விருப்­பத்­தையே மஹிந்த கேட்பார் என்றும் அவர்கள் அழுத்தம் கொடுத்­தனர்.

மஹிந்­தவின் செல்­வாக்கில் பாரா­ளு­மன்­றத்­துக்குச் சென்று அமைச்­ச­ரா­கவும் இருந்த றியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர போன்­ற­வர்கள், கோத்­தா­பய ராஜபக் ஷவை நிறுத்­தா­விட்டால், பொது­ஜன ஐக்­கிய முன்­னணி நிறுத்தும் வேட்­பா­ளரை ஆத­ரிக்­க­மாட்டோம் என்று மல்­லுக்­கட்­டி­னார்கள்.

இவை­யெல்லாம், மஹிந்­தவின் கையை மீறி நடக்கத் தொடங்­கிய விட­யங்­க­ளா­கவே பார்க்­கப்­பட்­டன.

கோத்­தா­பய ராஜபக் ஷவை வேட்­பா­ள­ராக நிறுத்­து­வது என்ற முடி­வுக்கு மஹிந்த ராஜபக் ஷ தானாக வந்தார் எனத் தெரி­ய­வில்லை. அந்த நிலைக்கு கொண்டு வரப்­பட்டார் என்­பதே உண்மை.

கோத்­தா­பய ராஜபக் ஷவை வேட்­பா­ள­ராக அறி­விக்கும் உரையில், மஹிந்த ராஜபக் ஷ தெரிந்தோ தெரி­யா­மலோ ஒரு வார்த்­தையைக் கூறி­யி­ருந்தார். அதனை பலரும் கவ­னித்­தி­ருக்­க­வில்லை.

“எனது விருப்­பத்தை விடவும் நாட்டின் விருப்­பமே எனக்கு முக்­கியம். அவரை நான் தெரிவு செய்­ய­வில்லை. நீங்­களே தெரிவு செய்­தி­ருக்­கி­றீர்கள் என அவர் குறிப்­பிட்டிருந்தார்.

இது கோத்­தா­பய ராஜபக் ஷவை நிறுத்தும் திட்­டத்தில் மஹிந்த இல்லை என்­ப­தையும், அவ­ருக்கு இதில் முழு உடன்­பாடு இல்லை என்­ப­தையும் எடுத்துக் காட்­டு­கி­றது.

1988 ஜனா­தி­பதித் தேர்­தலில் பிரே­ம­தா­ஸவை எப்­ப­டி­யான முகத்­துடன் ஜே.ஆர். ஜெய­வர்த்­தன அறி­மு­கப்­ப­டுத்­தி­னாரோ, 2005 தேர்­தலில் எவ்­வா­றான முகத்­துடன், மஹிந்த ராஜபக் ஷவை சந்­தி­ரிகா அறி­முகம் செய்­தாரோ, அதே வாடிய முகத்­துடன் தான், கோத்­தா­பய ராஜபக் ஷவை அறி­முகம் செய்­தி­ருந்தார் மஹிந்த ராஜபக் ஷ.

19 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் மூலம், பிர­த­ம­ருக்கே கூடுதல் அதி­காரம், நான் பிர­த­ம­ராக இருப்பேன், கோத்தா ஜனா­தி­ப­தி­யாக இருப்பார் என்று மஹிந்த ராஜபக் ஷ கூறி­யது, அவர் ஒரு சங்­க­ட­மான நிலைக்குள் இருக்­கிறார் என்­பதைத் தான் காட்­டி­யி­ருக்­கி­றது.

அவர்­க­ளுக்குள் யார் பெரிது என்ற ஈகோ இப்­போதே உரு­வாகி விட்­டது என்­ப­தையே இது சுட்டி நிற்­கி­றது.

மஹிந்­த­வுக்கு மாத்­தி­ர­மன்றி, அடுத்­த­முறை தனது மகன் நாமல் ராஜபக் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக களமிறக்கும் திட்டத்துக்குக் கூட கோத்தாபய ராஜபக் ஷவினால் ஆபத்து இருப்பதை மஹிந்த ராஜபக் ஷ உணராமல் இல்லை.

ஆனாலும், எலிய, வியத்மக மற்றும் சிங்களக் கடும்போக்கு வல்லுனர்களின் வியூகத்துக்குள் மஹிந்த ராஜபக் ஷ விழுந்து விட்டார்.

இந்தநிலையில், கோத்தாபய ராஜபக் ஷவின் அரசியல் வெற்றி மஹிந்தவின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியிக்கு அவசியமானது. அவரது தலைமையில் எதிர்கொள்ளும் முதலாவது தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும்.

அவ்வாறு வெற்றி பெற்றால், அது மஹிந்தவின் அதிகாரம், பிடி என்பன இன்னமும் தளர்ந்து போகவே வழிவகுக்கும்.

அதேவேளை, கோத்தாபய ராஜபக் ஷ தோல்வியடைந்தாலும் அது மஹிந்தவின் எதிர்காலத்தையும் ராஜபக் ஷவினரின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.

இது மஹிந்த ராஜபக் ஷவைப் பொறுத்தவரை அக்கினிப் பரீட்சை தான், வென்றாலும் சிக்கல் தோற்றாலும் சிக்கல்.

– என்.கண்ணன்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.