`வாட்ஸ்அப் வேணாம்னு சொன்னேன், கேட்கலை… கொன்னுட்டேன்!” – போலீஸாரை அதிரவைத்த கணவரின் வாக்குமூலம்

0
314

மனைவி மீதான சந்தேகத்தால் அடித்துக்கொன்று, அவரது பிணத்தை எரித்துவிட்டு, ‘என் மனைவியைக் காணலை’ என்று புகார் கொடுத்த கணவரை போலீஸார் கைதுசெய்ததால், கரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பூங்கா நகரைச் சேர்ந்தவர், சிவசங்கரன். இவரது மனைவி சூர்யகுமாரி. சிவசங்கரன், அதே பூங்கா நகர் பகுதியில் எஸ்.எஸ். கார்மென்ட்ஸ் நடத்திவருகிறார்.

88823811d28cd2385f26c0a76375db7d
சூர்யகுமாரி (கொலைசெய்யப்பட்ட பெண்)

இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி, கண்ணீரும்கலக்கமுமாக தான்தோன்றிமலை காவல்நிலையத்துக்குச் சென்ற சிவசங்கரன், “என் மனைவியை காலையில் இருந்து காணலை. அவளுக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை. கொஞ்சம் விசாரிச்சு கண்டுபிட்டிச்சுக் கொடுங்க” என்று புகார் கொடுத்துள்ளார்.

அங்குள்ள காவலர்களும் சிவசங்கரன் கொடுத்த புகாரைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

சிவசங்கரனின் உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பத்தினர் என்று பல்வேறு தரப்புகளிடம் விசாரணை மேற்கொண்டும் வழக்கில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

policeதான்தோன்றிமலை காவல் நிலையம்

இந்நிலையில், சிவசங்கரனின் மனைவி சூர்யகுமாரியைக் கண்டுபிடிக்க, கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தனிப்படை அமைத்தார்.

அவர்களும் மர்மமான முறையில் காணாமல்போன சூர்யகுமாரியை தீவிரமாகத் தேடிவந்தனர்.

இந்நிலையில், கடந்த 14 -ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோட்டில் உள்ள டோல்பிளாசா பகுதியில், சாக்குமூட்டையில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்பிணம் ஒன்று இருப்பதாக, தான்தோன்றிமலை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அவர்களோடு தனிப்படை போலீஸாரும் அங்கு விரைந்தனர். அருகில் உள்ள அம்மைநாகக்கனூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ததோடு, அந்தப் பெண் அணிந்திருந்த நகை, அணிகலன்களை வைத்து விசாரித்தனர்.

அப்போது, அது சிவசங்கரனின் மனைவி சூர்யகுமாரி என்பது விசாரணையில் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தச் சூழலில்தான்,சிவசங்கரனை அழைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், “நானே மனைவியை இழந்து துக்கத்தில் இருக்கிறேன். என்மீதே சந்தேகப்படலாமா? கேஸ் கொடுத்த நானே அவளை எப்படி கொலை செய்திருப்பேன்?” என்று நாடகமாடியிருக்கிறார்.

ஆனால், போலீஸார் தங்களது வழக்கமான கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொள்ள, அந்த விசாரணையை தாக்குப்பிடிக்க முடியாமல் தனது மனைவி சூர்யகுமாரியை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார்.

கொலைசெய்ததற்கான காரணங்களை சிவசங்கரனிடம் போலீஸார் கேட்டிருக்கிறார்கள்.

kolaii
சிவசங்கரன் நடத்திவந்த தொழிற்சாலை

அப்போது, பொலபொலவென கண்ணீர்விட்ட சிவசங்கரன், “சொந்தமா தொழில் செய்துவந்த நான், அதில் கிடைத்த வருமானதை வைத்து என் மனைவியை ராணிமாதிரி வாழவச்சேன்.

ஆனா, அவ எனக்கு துரோகம் செய்துவிட்டு, பல ஆண்களோடு தொடர்பு வச்சுக்கிட்டா. வாட்ஸப்பில் எந்நேரமும் கண்ட ஆண்களுடன் தொடர்ந்து சாட் செஞ்சுட்டு வந்தா.

பலமுறை அவளைக் கண்டிச்சேன். அவ என் பேச்சை துச்சமா நினைச்சிட்டு, தன் இஷ்டத்துக்கு நடந்துக்கிட்டா.

இதனால், மனம்வெறுத்துப்போன நான், ஆரஅமர உட்கார்ந்து யோசிச்சேன். ‘சூர்யகுமாரியை கொலைசெய்துவது ஒன்றுதான் தீர்வு’ என்ற முடிவுக்குவந்தேன்.

வீட்டில் படுத்திருந்த அவளை அடித்துக் கொன்றேன். அவ உடலை மூட்டையா கட்டிக்கொண்டுபோய் திண்டுக்கல் அம்மைநாயக்கனூர் பகுதியில் எரிக்க முயன்றேன்.

ஆளரவம் வர, அங்கிருந்து வந்துட்டேன். என்மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, ‘மனைவியை காணலை’னு நானே உங்ககிட்ட வந்து கேஸ் கொடுத்தேன்.

என்மீது சந்தேகம் வராதுனு நினைச்சேன். ஆனா, என்னைக் கண்டுபிடிச்சுட்டீங்க” என்று சொல்லியிருக்கிறார். இந்தச் சம்பவம், கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*