அனுரகுமாரவை வேட்பாளராக அறிவித்தது ஜேவிபி

0
136

சிறிலங்கா அதிபர் தேர்தலில், ஜேவிபியின் சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார போட்டியிடுவார் என, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேவிபி தலைமையில் தேசிய மக்கள் சக்தி என்ற  கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 28 அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், புலமையாளர்கள் அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அமைப்பின் பேரணி இன்று மாலை கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றது.

இந்தப் பேரணியிலேயே, தமது சார்பில் அதிபர் வேட்பாளராக அனுரகுமார திசநாயக்க போட்டியில் நிறுத்தப்படுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய பேரணியில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்தப் பேரணி இரண்டு பிரதான அரசியல் கூட்டணிகளுக்கும், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

jvp-ralley-2jvp-ralley-3

LEAVE A REPLY

*