ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் கொடூரம் ; தற்கொலைகுண்டுத் தாக்குதலில் 63 பலி, 183 பேர் காயம்

0
130

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 183 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

1243796-la-salle-de-mariage-ou-un-attentat-kamikaze-a-tue-63-personnes-le-18-aout-2019-a-kaboul-en-afghanistகாபுல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு 17 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

5d58e8251af28a960b8b4647இதில் சுமார்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே திடீரென வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் சம்பவ இடத்திலேயே பலர் கொல்லப்பட்டனர்.

un-attentat-kamikaze-lors-d-un-mariage-fait-63-morts-a-kaboul-en-afghanistan-87bad5-0@1xஇந்த வெடிகுண்டு தாக்குதலில் திருமண விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், குழந்தைகள் என சுமார்  63 பேர் உயிரிழந்த நிலையில், 183 பேர் காயமடைந்துள்ளனர்.

NM6WBD6WZ3PNE5YGOWKUH3SKRMஇந்நிலையில், காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாமென செய்திகள் தெரிவிக்கின்றன.

20190818054731326

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.