பட்டப்பகலில் ஹோட்டலுக்குள் புகுந்த.. ‘மர்ம கும்பலின் வெறிச் செயல்’.. ‘அச்சத்தில் உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்..’

0
310

திருவள்ளூரில் பட்டப்பகலில் ஹோட்டலுக்குள் புகுந்த மர்ம கும்பலொன்று ஒருவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு அருகில் 4 பேர் கொண்ட மர்ம கும்பலொன்று ஒருவரை அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் துரத்தி வந்துள்ளது.

உயிருக்கு பயந்து ஓடிய நபர் அங்கிருந்த குமரன் ஹோட்டலுக்குள் சென்று தப்பிக்க முயன்றுள்ளார்.

ஆனால் அவரைத் துரத்தி வந்த கும்பல் ஹோட்டலுக்குள்ளேயே வைத்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

ஹோட்டலில் சாப்பிட வந்தவர்கள் இதைப் பார்த்து செய்வதறியாது அச்சத்தில் உறைந்துபோய் நின்றுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து கிடந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஹோட்டலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலையானவர் யார்? அவரைக் கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பவை குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

*