உலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டிரம்ப்!!

0
75

உலகின் மிகப்பெரிய தீவை வாங்குவதற்கு அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக செய்தி வெளியானதை அடுத்து, தாங்கள் “விற்பனைக்கு இல்லை” என்று கிரீன்லாந்து கூறியுள்ளது.

ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள, டென்மார்க்கின் தன்னாட்சியுள்ள ஆட்சிப்பகுதியான கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது தொடர்பான தனது ஆலோசகர்களுடனான கூட்டத்தின்போது டிரம்ப் விரும்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், கிரீன்லாந்தின் அரசாங்கம் இந்த யோசனைக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளது: “நாங்கள் வணிகத்திற்காக திறந்திருக்கிறோம், விற்பனைக்கு அல்ல.”

_108346650_f9701d0a-4652-43ff-8ca8-1a38e0963160அதே போன்று டிரம்பின் விருப்பம் தொடர்பாக பதிலளித்துள்ள கிரீன்லாந்தின் முன்னாள் பிரதர் லார்ஸ் லொக்கே ராஸ்முஸ்ஸென், “இது கண்டிப்பாக ஏப்ரல் மாதம் முதலாம் தேதி செய்யப்படும் நகைச்சுவையாக இருக்க வேண்டும். ஆனால், இது அதற்கான சரியான காலமல்ல,” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை முதலில் வெளியிட்ட வோல் ஸ்ட்ரீட் ஜர்னல், டிரம்ப் இந்த திட்டம் குறித்து “மாறுபட்ட அளவிலான தீவிரத்தன்மையுடன்” பேசியதாக தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

மற்ற ஊடகங்களில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்களின்படி, டிரம்ப் நகைச்சுவையாக கூறினாரா அல்லது அமெரிக்க நிலப்பரப்பை உண்மையிலேயே விரிவுபடுத்துவதில் தீவிரமாக இருக்கிறாரா என்பதில் வேறுபடுகின்றன.

தொடர்புடைய செய்தி

201908171654197243_Trump-inquires-about-US-buying-Greenland-but-its-not-for_SECVPF.gifஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கிரீன் லேண்ட் என்ற தீவு உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய தீவு என்ற பெருமை கொண்டது. இது டென்மார்க்கில் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

22 லட்சம் (2.2 மில்லியன்) சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தீவின் பெரும் பகுதி பனிபடர்ந்து இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் வனமாக உள்ளது.

இங்கு துலே என்ற இடத்தில் அமெரிக்காவின் விமான படை தளம் உள்ளது. ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். எனவே விமான படை தளத்துக்கு அமெரிக்கா வாடகை செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் கிரீன் லேண்ட் தீவை அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் விரும்புகிறார்.

அது குறித்து தனது ஆலோசகர்களுடன் விவாதித்தார். வருகிற செப்டம்பர் 2 மற்றும் 3-ந்தேதிகளில் அவர் டென்மார்க்கில் சுற்றுப் பயணம் செய்கிறார்.

அப்போது டென்மார்க் பிரதமர் மெட்டி பெரி டெரிக்சனை சந்தித்து கிரீன்லேண்ட் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியது.

இதை டென்மார்க் மறுத்துள்ளது. கிரீன்லேண்ட் தீவை விற்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.

விற்பனை செய்வதாக இருந்தால் வெளிப்படையாக தெரிவிப்போம் என கிரீன்லேண்ட் தீவின் வெளியுறவு மந்திரி ஆனி லோன பேக்கர் தெரிவித்துள்ளார்.

கிரீன்லேண்ட் தீவு விற்பனை செய்யப்படுவதாக கூறுவது ஏப்ரல் தின முட்டாள் ஜோக் என டென்மார்க் முன்னாள் பிரதமர் லார்ஸ் லோக்கி ராஸ்முஸ்சென் கூறியுள்ளார்.

இந்த தீவை விலைக்கு வாங்க விரும்புவதன் மூலம் கிரீன்லேண்ட் தீவில் வாழும் 50 ஆயிரம் குடிமக்களை டென்மார்க் தன்னிடம் விற்று விடும் என அமெரிக்கா நினைப்பது முற்றிலும் கொடூரமானது என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.