எதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்

0
289

இந்த துதியை மனமார படித்தால் உங்களுக்கு எதிரிகளால் ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும், சத்ரு ஜெயம் எனப்படும் எதிரிகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும்.

ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர ஹாஸி ஹாஸி,
பிராணக்ர ஹாஸி ஹூம் பட் ஸர்வ
சத்துரு சம்ஹாரணாய சரப ஸாலுவாய
பக்ஷி ராஜாய ஹூம்பட் ஸ்வாஹா.

உலகை காக்க சிவபெருமானை எடுத்த உருவம் தான் “சரபேஸ்வரர்”. ஸ்ரீ சரபேஸ்வரரை போற்றும் இந்த மூல மந்திரத்தை போற்றி துதிகளை தினமும் உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதிப்பது சிறப்பு.

ஞாயிற்று கிழமையன்று உடல், மன சுத்தி செய்து கொண்டு, எத்தகைய புலால் உணவுகளையும் உண்ணாமல் அந்த தினத்தில் வரும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளான ராகு காலத்தில் சிவன் கோவிலுக்கு சென்று சரபேஸ்வரர் சந்நிதி முன்போ அல்லது சிவபெருமான் சந்நிதி முன்போ விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, இந்த துதியை மனமார படித்தால் உங்களுக்கு எதிரிகளால் ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும், சத்ரு ஜெயம் எனப்படும் எதிரிகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும்.

மந்திரிக மற்றும் துஷ்ட சக்தி பாதிப்புகளில் இருந்து விமோச்சனம் கிட்டும். நீங்கள் புது வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தாமதங்கள் நீங்கும். நினைத்த காரியங்கள் நடைபெற தொடங்கும். மனம் மற்றும் செயல்புரிவதில் இருக்கும் தயக்கங்கள் நீங்கி தெளிவு ஏற்படும்.

பேச்சுத் திறமை பெற்ற உபய சர யோகம்

201908161419462069_Astrology_SECVPF.gifசுய ஜாதகத்தில் சுப உபய சர யோகம் அமைந்துள்ளவர்கள் வாக்கு வன்மை, பேச்சுத் திறமை, செல்வாக்கு, அந்தஸ்து, கெளரவம், பொருளாதார வளர்ச்சி ஆகிய நன்மைகளை பெற்று வாழ்வார்கள்.

ஜோதிடம்
சூரியனுக்கு முன் உள்ள வீடு அல்லது அடுத்து உள்ள வீடு ஆகியவற்றில் செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி ஆகியவற்றில் ஐந்து கிரகங்களில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அமர்ந்திருந்தால் அதற்கு உபய சர யோகம் என்று பெயர்.

அதில், சூரியனுக்கு முன்புறம் அல்லது பின்புறம் சுபக்கிரகங்களான புதன், சுக்ரன், குரு ஆகியவை அமைந்திருந்தால் அது சுப உபய சர யோகம் என்று சொல்லப்படும்.

அதேபோல சூரியனுக்கு முன்புறம் அல்லது பின்புறம் பாபக் கிரகங்களான செவ்வாய், சனி ஆகியவை அமர்ந்திருந்தால் அது பாப உபய சர யோகம் என்று சொல்லப்படும்.

சுய ஜாதகத்தில் சுப உபய சர யோகம் அமைந்துள்ளவர்கள் வாக்கு வன்மை, பேச்சுத் திறமை, செல்வாக்கு, அந்தஸ்து, கெளரவம், பொருளாதார வளர்ச்சி ஆகிய நன்மைகளை பெற்று வாழ்வார்கள்.

ஆனால், பாப உபய சர யோகம் கொண்டவர்கள் கடின உழைப்புக்கு பின்னரே எதையும் பெற இயலும் என்பது ஜோதிட விதியாகும்.

LEAVE A REPLY

*