70 வயது யானை பெரஹராவில் பயன்படுத்தியமை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு!!

0
95

சர்ச்சைக்குரிய 70 வயதான யானையான டிகிரியை கண்டி தலதா பெரஹராவுக்கு பயன்படுத்தியமை குறித்து உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வனஜீவராசிகள் அமைச்சர் ஜோன் அமரதுங்க உத்தரவிட்டுள்ளார்.

குறித்த யானை தொடர்பில் வெளியிடப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், அதன் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவதாக, அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PRC_80339926குறித்த யானையானது நேற்றைய தினம் (15) வீழ்ந்து கிடந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதால், யானையின் நிலை குறித்து ஆராய்ந்து யானைக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை மேற்கொள்ளுமாறும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

கண்டி பெரஹராவுக்கு டிக்கிரி எனும் 70 வயதான வயோதிப யானையை பயன்படுத்தியமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

உலக யானை தினத்தில் (12), குறித்த யானையின் நலிந்த உடலின் புகைப்படத்தை, தாய்லாந்தைச் சேர்ந்த வன விலங்கு ஆர்வலர் செண்டுயின் சாய்லட், சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த கடந்த புதன்கிழமை (14) கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்ற பெரஹராவில் யானை அணி வகுப்பிற்காக குறித்த யானையையும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

PRI_80037177குறித்த யானை கடந்த 55 ஆண்டுகளாக தலதா பெரஹராவில் பங்குபற்றுவதாக, தலதா மாளிகையின் யானைகளுக்கு பொறுப்பானவரான, பிரதீப் மியானபால தெரிவித்திருந்தார்.

அத்துடன் வயதான யானையை பெரஹராவுக்குப் பயன்படுத்துவது தொடர்பில் விலங்கு ஆர்வலர் அமைப்புகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த குறித்த யானைக்கு பொறுப்பாகவுள்ள அமல் திலகரத்ன, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, தான் அதனை தனது காவலில் எடுத்துக்கொண்டதாகவும், அது ஆறு மாதங்களாக செரிமான கோளாறால் அவதியுற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த காலப் பகுதியில், யானை தொடர்பில் தாங்கள் மேற்கொண்ட வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு இம்முறை தலதா பெரஹராவில் அதனையும் இணைத்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

*