பிறவி தோஷம் போக்கும் பாடல்

0
121

அம்பாளை மனதில் தியானித்து இந்த பாடலை உங்களால் எத்தனை முறை முடிகிறதோ அத்தனை முறைப் பாடலாம். இதைத் தொடர்ந்து செய்து வர நீங்கள் பிறந்த நேரத்தில் ஏற்பட்ட தோஷங்கள் விலகும்.

மனிதன் இப்பூமியில் ஜெனிக்கும் போது அன்றைய கிரக, நாள், திதி, கிழமை போன்றவற்றில் ஏற்படும் மாறுபாடுகளால் அவனுக்கு “பிறவி தோஷம்” உண்டாகிறது.

இதனால் பாதிக்கப்படும் அம்மனிதன் வாழ்வில் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கிறான். இது போன்ற பிரச்சனைகளை தீர இவர்கள் பாட வேண்டிய பாடல் தான் இது.

“கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்குவம் பேபழுத்த
படியே மறையின் பரிமள மேபனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப்பிற வாமல் வந்து ஆண்டுகொள்ளே”

அபிராம பட்டரால் இயற்றப்பட்ட “அபிராமி அந்தாதியின்” ஒரு பகுதியான இப்பாடல் வரிகள் இறையாற்றல் நிறைந்தாகும். இப்பாடலை தினமும் காலையில் தேக மன சுத்தியுடன் “அம்பாள்” கோவிலுக்குச் சென்றோ அல்லது அம்பாளை மனதில் தியானித்து உங்களால் எத்தனை முறை முடிகிறதோ அத்தனை முறைப் பாடலாம்.

இதைத் தொடர்ந்து செய்து வர நீங்கள் பிறந்த நேரத்தில் ஏற்பட்ட தோஷங்கள் விலகும். அம்பாளின் அருளினால் நீங்கள் விரும்பிய அத்தனைச் செல்வங்களையும் பெறுவீர்கள்.

LEAVE A REPLY

*