இனப்படுகொலையாளிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்!!- (வீடியோ)

0
30

இனப்படுகொலையாளியான கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களை பொறுத்த வரையில் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நேரடியான இனப்படுகொலையாளி எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அவர் வெளிப்படையாகவே தமிழர்களை படுகொலை செய்தவர். 20ஆம் நூற்றாண்டில் ஹிட்லருக்கு பிறகு இனப்படுகொலை புரிந்த ஒரு மனிதராக கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேசத்தினால் பார்க்கப்படும் ஒருவர் எனவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களை படுகொலை செய்து அவர்களை அழித்த கோட்டாபயவை ஜனாதிபதியாக தமிழர்கள் தெரிவு செய்வார்கள் என அவர் நினைத்தால் அதுபகற்கனவு எனவும் சிறிதரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.