மாதவன் படத்தில் சூர்யா, ஷாருக்கானின் ரோல் என்ன தெரியுமா?

0
116

நடிகர் மாதவன் நடித்து, இயக்கி வரும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிக்கும் நிலையில் அவர்களது கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

1990-களில் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை வெளிநாடுகளுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட விஞ்ஞானி நம்பி நாராயணன், தனது வேலையை இழந்து சிறைச் சென்றார்.

சமீபத்தில் இது தொடர்பான வழக்கில் இருந்து நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.

serwநம்பி நாராயணின் சாதனையும், அவர் சந்தித்த சவால்களையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ள இப்படத்தை மாதவனே இயக்கியிருக்கிறார்.

இப்படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு சிம்ரன் மற்றும் மாதவன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள மாதவனின் முதல் மற்றும் கனவு படமான ‘ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் நடிக்கின்றனர்.

தமிழில் நடிகர் சூர்யாவும், ஹிந்தியில் நடிகர் ஷாருக்கானும், நம்பி நாராயணனை பேட்டி எடுக்கும் நெறியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.