காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரியை கடுமையா பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவல்..

0
384

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் முக்கிய பிரமுகர்கள் வரும் வரிசையில் உரிய பாஸ் இல்லாமல் அனுமதித்த காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் அனைவர் முன்னிலையிலும் மரியாதை குறைவாக திட்டிய காணொளி சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது.

அரசின் (காவல்துறை அதிகாரியை எல்லையை மீறி தவறாக பேசும் காஞ்சிபுரம் ஆட்சியருக்கும் தக்க தண்டனை கொடுப்பபார்களா??)

 

காவல்துறையினர் உரிய பாஸ் இல்லாமல் உள்ளே அனுமதித்து வருவதால், விஐபி வரிசை தினந்தோறும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது.

பொதுமக்கள், பக்தர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இதைப்பற்றி புகாராக கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

201908101941576090_1_phcold._L_styvpf

இந்நிலையில் நேற்றிரவு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பொன்னையா, பலரிடமும் விஐபி பாஸ் இல்லாதது தெரிய வந்ததும் அவர்களை அனுமதித்த காவல் ஆய்வாளரை கடிந்து கொண்டார்.

ஆய்வாளரை பற்றி வாய்மொழியாக புகார் அளித்து அவரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி ஆட்சியர் முறையிட்டார்.


.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.