பர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்!! -கபில்

0
248

எதிர் வரும் 11ஆம் திகதி, ஞாயிற்­றுக்­கி­ழமை பொது­ஜன முன்­ன­ணியின் மாநாடு நடக்கப் போகி­றது. அதில் கட்­சியின் தலைவ­ராக பத­வி­யேற்கப் போகும் மஹிந்த ராஜபக் ஷ, தமது ஜனா­தி­பதி வேட்பா­ளரை அறி­விக்கப் போகிறார்.

கடந்த முறை தேர்­தலின் போது பொது வேட்­பா­ள­ரான மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் எழுத்து மூலம் உடன்­பாடு  ஒன்றை செய்து கொள்­ளு­மாறு சந்­தி­ரிகா குமா­ர­துங்க கோரிய போதும், இரா.சம்­பந்தன் அது வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

அது கடைசியில் அவ­ருக்கே ஆப்­பாக மாறி­யது

தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் என்று பார்த்தால், மூன்று அணி­க­ளாக இருக்­கின்­றன. ஒன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இன்­னொன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, மூன்­றா­வது

விக்­னேஸ்­வரன் உரு­வாக்­கி­யுள்ள தமிழ் மக்கள் கூட்­டணி மற்றும் அத­னுடன் இணைந்து சுரேஸ் பிரே­மச்­சந்­திரன், ஐங்­க­ர­நேசன், அனந்தி சசி­தரன் போன்­ற­வர்­களின் தலை­மை­யி­லான கட்­சிகள்

கொழும்பு அர­சியல் களம் அடுத்து வரும் வாரங்­களில் சூடாகப் போகின்ற நிலை­யிலும், வடக்கு அர­சியல் களத்தில் பெரி­ய­ள­வி­லான எந்தப் பர­ப­ரப்­பையும் காண முடியவில்லை.

நவம்பர் மாத இறு­தியில் ஜனா­தி­பதித் தேர்தல் நடக்­கப்­போ­வது உறு­தி­யா­கி­யுள்ள நிலையில், அதற்­கான அறி­விப்பு பெரும்­பாலும் அடுத்த மாதம் வெளி­வரும் என்ற எதிர்­பார்ப்பு உள்­ளது.

இதற்கு முன்­னோ­டி­யாக, ஐ.தே.க தனது கூட்­டணிக் கட்­சி­களை இணைத்து, ஜன­நா­யக தேசிய முன்­ன­ணியை நாளை உரு­வாக்கப் போகி­றது. அதற்­க­டுத்து, தமது வேட்­பா­ளரை அறி­விக்கத் தயா­ரா­கி­றது.

மற்­றொரு புறத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை, பொது­ஜன முன்­ன­ணியின் மாநாடு நடக்கப் போகி­றது.

அதில் கட்­சியின் தலை­வ­ராகப் பத­வி­யேற்கப் போகும் மஹிந்த ராஜபக் ஷ, தமது ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­விக்கப் போகிறார்.

இன்­னொரு புறத்தில், ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்ள தமது வேட்­பா­ளரை எதிர்வரும் 18ஆம் திகதி அறி­விக்கப் போவ­தாக ஜே.வி.பி.யும் கூறி­யி­ருக்­கி­றது.

அதை­ய­டுத்து, வரும் செப்­டெம்பர் 2ஆம் திகதி தமது ஜனா­தி­பதி வேட்­பா­ளரை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் அறி­விக்கப் போகி­றது.

ஆக மொத்­தத்தில் வரும் ஜனா­தி­பதித் தேர்­தலை எதிர்­கொள்ள கொழும்பின் பிர­தான அர­சியல் கட்­சிகள் மும்­மு­ர­மான வேலையில் இறங்­கி­யி­ருக்­கின்­றன.

இந்தத் தேர்­தலில், தீர்க்­க­மான பங்கை வகிக்கக் கூடிய நிலையில் சிறு­பான்­மை­யின மக்கள் இருக்­கின்ற சூழலில் தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் பெரும்­பாலும் அதற்­கேற்ற வகையில் உசா­ரா­க­வில்லை.

ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளையும் கூட்­ட­ணி­க­ளையும் அறி­வித்த பின்னர், முடி­வெ­டுக்­கலாம் என்ற அலட்­சி­யமோ தெரி­ய­வில்லை. அவர்கள் அரைத் தூக்­கத்தில் இருப்­ப­தாகத் தெரி­கி­றது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பொது­வேட்­பா­ள­ரான மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரித்­தி­ருந்­தது. அதற்கு முன்னர் பொது­வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்ட சரத் பொன்­சே­காவை ஆத­ரித்­தது. இரண்டு பேருக்கும் நிபந்­த­னை­யின்­றியே ஆத­ரவு அளிக்­கப்­பட்­டது.

கடந்த முறை தேர்­தலின் போது பொது வேட்­பா­ள­ரான மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் எழுத்து மூலம் உடன்­பாடு ஒன்றை செய்து கொள்­ளு­மாறு சந்­தி­ரிகா குமா­ர­துங்க கோரிய போதும், இரா.சம்­பந்தன் அது வேண்டாம் என்று மறுத்து விட்டார். அது கடை­சியில் அவ­ருக்கே ஆப்­பாக மாறி­யது.

இப்­போது, கூட்­ட­மைப்பை எதிர்க்­கின்ற அனை­வரும் கூறு­கின்ற குற்­றச்­சாட்டு கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பேரம் பேசு­வ­தற்குக் கிடைத்த நல்ல­தொரு வாய்ப்பை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை என்­பது தான்.

பேரம் பேசி­யி­ருந்தால், தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் அனைத்தும் தீர்க்­கப்­பட்டு விடும் என்ற நம்­பிக்கை அவர்­க­ளிடம் இருக்­கி­றது.

அவ்­வா­றா­ன­தொரு நம்­பிக்கை பல­ரிடம் உள்ள சூழ்­நி­லை­யிலும் கூட, வரப் போகும் ஜனா­தி­பதித் தேர்­தலை எவ்­வாறு பயன்­ப­டுத்திக் கொள்­வது என்ற எந்த முன்­யோ­ச­னை­யு­மின்றி தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் இருக்­கின்­றன.

coldouglas175209202_5807303_13022018_SSS_CMYவடக்கு தமிழ் அர­சியல் பரப்பில் உள்ள கட்­சி­களில் ஈ.பி.டி.பி ஒரு தெளி­வான நிலைப்­பாட்டை எடுக்கும்.

அது நிச்­சயம் மஹிந்த ராஜபக் ஷ, சார்­பு­டை­ய­தா­கவே இருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. ஈ.பி.டி.பி கூட இப்­போது பொறு­மை­யாகத் தான் இருக்­கி­றது.

தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் என்று பார்த்தால், மூன்று அணி­க­ளாக இருக்­கின்­றன. ஒன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இன்­னொன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, மூன்­றா­வது விக்­னேஸ்­வரன் உரு­வாக்­கி­யுள்ள தமிழ் மக்கள் கூட்­டணி மற்றும் அதனுடன் இணைந்து சுரேஸ் பிரே­மச்­சந்­திரன், ஐங்­க­ர­நேசன், அனந்தி சசி­தரன் போன்­ற­வர்­களின் தலை­மை­யி­லான கட்­சிகள்.

இந்த மூன்று அணி­க­ளுமே ஒரே கூட்டில் இருந்­தவை. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பாக இருந்து அவ்­வப்­போது பிரிந்து, தனித்­த­னி­யான அணி­க­ளாக மாறி­யி­ருப்­பவை.

2010 ஜனா­தி­பதித் தேர்­தலில் சரத் பொன்­சே­காவை ஆத­ரிக்கும் முடிவு எடுக்­கப்­பட்ட போது, அதற்குத் தலை­யாட்­டி­ய­வர்­களும், 2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிக்க முடி­வெ­டுத்த போது அதற்கு கை உயர்த்­தி­ய­வர்­களும், தான் இந்த மூன்று அணி­க­ளிலும் இருக்­கி­றார்கள்.

ஆனால், வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் இந்த மூன்று அணி­களும் எவ்­வா­றான நிலைப்­பாட்டை எடுக்கப் போகின்­றன என்ற கேள்வி இருக்­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை பொறுத்­த­வ­ரையில், இப்­போது வரை ஆட்­சியில் உள்ள ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்­கத்­துக்கு முண்டு கொடுத்து வரு­கி­றது. ஐ.தே.க நிறுத்­தப்­போகும் வேட்­பா­ள­ரையே பெரும்­பாலும் ஆத­ரிக்கும் வாய்ப்­பு­களும் உள்­ளன. அதற்குக் காரணம் உள்­ளது.

கடந்த காலங்­களில், மஹிந்த ராஜபக் ஷ, மீண்டும் ஆட்­சிக்கு வந்து விடக் கூடாது என்­ப­தற்­காக 2015இல் ஆட்சி மாற்­றத்­துக்கு ஆத­ரவு கொடுத்­த­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கூறி­யது. அதே நிலைப்­பாட்டை இப்­போது வரை பேணு­கி­றது,

2018 ஒக்­டோ­பரில் ஆட்­சிக்­க­விழ்ப்பு நடந்­த­போது, அதனை முன்­னின்று தோற்­க­டிப்­பதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வகித்த பங்கை யாரும் குறைத்து மதிப்­பிட முடி­யாது.

அப்­போதும் கூட்­ட­மைப்பு, மீண்டும் மஹிந்­தவின் சர்­வா­தி­கார ஆட்சி வந்து விடக் கூடாது என்­பது தமது முடி­வு­க­ளுக்குக் காரணம் என்று நியா­யப்­ப­டுத்­தி­யது.

அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான விவா­தத்தில் உரை­யாற்­றிய இரா.சம்­பந்தன் மீண்டும் மஹிந்த ஆட்சி வந்து விடக் கூடாது என்­பதில் உறு­தி­யாக இருப்­ப­தாக, தெளி­வாக கூறி­யி­ருந்தார்.

எனவே, மஹிந்த ராஜபக் ஷ நிறுத்­தப்­போகும் வேட்­பா­ளரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆத­ரிக்­காது என்­பதே பொது­வான எண்ணம்.

அவ்­வா­றாயின், ஐ.தே.க நிறுத்தப் போகும் வேட்­பா­ள­ருடன் பேரம் பேசும் வாய்ப்பை கூட்­ட­மைப்பு பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். அதற்­கான முன்­மு­யற்­சிகள் எடுக்கப்பட்­டுள்­ளதா ? என்று தெரி­ய­வில்லை.

ஜன­நா­யக தேசிய முன்­னணி உரு­வாக்­கப்­பட்டு அதன் வேட்­பாளர் அறி­விக்­கப்­படும் வரை பொறு­மை­யாக இருப்­ப­தற்கு கூட்­ட­மைப்பு முடிவு செய்­தி­ருக்­கலாம்.

ஓடு மீன் ஓட உறுமீன் வரு­ம­ளவும் காத்­தி­ருக்க விரும்பும் கூட்­ட­மைப்­புக்கு உறுமீன் கிடைக்­குமா அல்­லது ஏற்­க­னவே நடந்­தது போல ஏமாற்றம் தான் மிஞ்­சுமா என்­பதை பொறுத்­தி­ருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த தரப்­பான தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் தலைவர் சி.வி.விக்­னேஸ்­வரன், பிர­தான ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளுடன் பேசி தமது கோரிக்­கை­களை ஏற்றுக் கொள்­ப­வ­ருக்கு ஆத­ரவு வழங்­கலாம் என்று கூறி­யி­ருந்தார்.

அவ­ரது அணியில் உள்ள சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரனும், அவ்­வா­றான நிலைப்­பாட்­டையே வெளிப்­ப­டுத்தி வரு­கிறார்.

mqdefault-720x450ஆனால், மஹிந்த ராஜபக் ஷ, நிறுத்­தப்­போகும் வேட்­பா­ள­ரு­டனும் பேரம் பேசு­வாரா- அதற்­கான வாய்ப்பைக் கொடுப்­பாரா விக்­னேஸ்­வரன் என்ற தெளிவு இல்லை.

மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­துடன் விக்­னேஸ்­வரன் முட்டி மோதிக் கொண்­ட­வ­ராக இருந்­தாலும், மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ரான அர­சி­யலை இரா.சம்­பந்தன் போல முன்­னெ­டுத்­த­வரோ, கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­தி­ய­வரோ அல்ல.

கூட்­ட­மைப்­புக்கு வாய்த்த சந்­தர்ப்­பங்­களைப் போல, விக்­னேஸ்­வ­ர­னுக்கு மஹிந்த எதிர்ப்பு நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தும் சந்­தர்ப்­பங்­களும் அமை­ய­வில்லை.

எனவே மஹிந்த ராஜபக் ஷ என்ற கார­ணியின் அடிப்­ப­டையில் அவ­ரிடம் இருந்து ஒதுங்கி, கூட்­ட­மைப்பைப் போன்று ஒரு பக்­கத்­தி­லேயே விக்­னேஸ்­வ­ரனும் பேரம் பேசக் கூடிய வாய்ப்­புகள் உள்­ளன.

ஆனாலும், ஐ.தே.க அர­சாங்­கத்தை விக்­னேஸ்­வ­ரனும் சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரனும் விமர்­சித்துக் கொண்டு, இன்­னொரு பக்கம் அதன் வேட்­பா­ளரை ஆத­ரிக்கும் அர­சியல் முடிவை எடுப்­பதும் சிக்­க­லா­னது.

அடுத்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியைப் பொறுத்­த­வ­ரையில், இராமன் ஆண்டால் என்ன இரா­வணன் ஆண்டால் என்ன என்ற நிலைப்­பாட்­டி­லேயே இருக்­கின்ற கட்சி அது.

2015 ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிக்க கூட்­ட­மைப்பு எடுத்த நிலைப்­பாட்­டையும் விமர்­சித்­தி­ருக்­கிறார் கஜேந்­தி­ர­குமார்.

மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்க வேண்டும் என்­ப­தற்­காக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரித்­தி­ருக்கக் கூடாது என்­பது அவ­ரது வாதம்.

இதன்­படி பார்த்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி இந்த ஜனா­தி­பதி தேர்­தலை பேரம் பேசு­வ­தற்­கா­கவோ, வேறு எந்த விதத்­திலோ பயன்­ப­டுத்திக் கொள்ள வாய்ப்­பில்லை.

ஆனால் தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில், ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்கும் சக்தி தாம் என்­பதை நிரூ­பிக்கும் வாய்ப்பு இருக்கும் போது அதனை பயன்­ப­டுத்­தாமல் ஒதுங்­கி­யி­ருக்கப் போவ­தில்லை.

இவ்­வா­றான ஒரு சூழலில் மூன்­றாக பிள­வு­பட்டு நிற்கும் தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள், வரும் ஜனா­தி­பதி தேர்­தலை ஒன்­றாக இணைந்து, அதற்­கான வாய்ப்­பு­களை பயன்­ப­டுத்திக் கொள்ளப் போவ­தில்லை.

சிவில் சமூக அமைப்­புகள் எல்லா தமிழ் கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைந்து பேச வைத்து, தெளி­வான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் கடந்த புதன்­கி­ழமை செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறி­யி­ருந்தார்.

தமிழ் அர­சியல் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து ஒரு முடிவை எடுக்கக் கூடிய நிலையில் இல்லை என்­ப­தையே சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரனின் கருத்து எடுத்துக் காட்­டு­கி­றது.

இப்­போதும் கூட, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்கள் கூட்­டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்­ளிட்ட தரப்­புகள் இந்த ஜனா­தி­பதித் தேர்­தலை ஒன்­றாக இணைந்து பேரம் பேசும் வாய்ப்­புக்குப் பயன்­ப­டுத்திக் கொண்டால் அது சாத­க­மா­னது.

ஏனென்றால், தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் பிள­வு­பட்டு நிற்கும் போதும் தமிழ் மக்­களின் வாக்­கு­களும் பிள­வு­பட்டே இருக்கும் என்றே பிர­தான கட்­சிகள் முடி­வுக்கு வந்து விடும். அவ்­வா­றான நிலையில் எந்தத் தரப்புடன் பேரம் பேச முனையும் தரப்புகளும், பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை.

இந்த பேரம் பேசலில் சர்வதேச தரப்புகளை குறிப்பாக இந்தியாவை இழுக்க வேண்டும், அதன் மத்தியஸ்தத்தை பெற வேண்டும் என்று விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

ஆனால், இந்தியாவோ வேறெந்த நாடோ, வெளிப்படையாக இத்தகைய பேரம் பேசலுக்கு உடன்படப் போவதில்லை. அது உள்ளக தலையீடாக பார்க்கப்படும். அவவ்வாறான ஒரு தோற்றம் ஒன்று ஏற்படுவதை இந்தியாவோ, அமெரிக்காவோ, சீனாவோ விரும்பாது.

இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரிடமும் பேரம் பேசி யார் பொருத்தமானவர், அதிகம் சாதகமானவர் என்ற அடிப்படையில் தமிழ்க் கட்சிகள் முடிவை எடுக்கப் போகின்றனவா அல்லது, வேட்பாளரைப் பொறுத்து, கட்சியைப் பொறுத்து முடிவு எடுக்கப் போகின்றனவா ? என்பதைள அவை தூக்கத்தில் இருந்து எழுந்த பின்னரே உறுதி செய்ய முடியும்.

-கபில்

LEAVE A REPLY

*