திருமணமான பெண் திருநம்பியிடம் தஞ்சம்!!

0
241

திருமணமாகி 6 வயது குழந்தை உள்ள பள்ளி தோழி மீது கொண்ட காதல் காரணமாக, பெண் ஒருவர் திருநம்பியாக மாறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆனையூரைச் சேர்ந்த சுகன்யாவும், எப்ஸியாவும் பள்ளி பருவ தோழிகள். மதுரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 2007-ல் 10-ம் வகுப்பு வரை படித்த இவர்கள், எப்போதும் ஒன்றாக சுற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

எப்ஸியா பெண்ணாக இருந்த போதிலும், நாளடைவில் ஏற்பட்ட பாலின மாறுபாட்டால், அவர் ஆணாக மாற தொடங்கியதால் இருவரின் நெருக்கத்தை அறிந்த சுகன்யாவின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

asdffffஇந்நிலையில் கடந்த 2012-ல் ராமநாதபுரம் கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு சுகன்யாவை திருமணம் செய்து கொடுத்தனர்.

7 ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்த நிலையில், இவர்களுக்கு ஆறு வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.

ராஜேசுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, அவரால் சரிவர வெளியில் எழுந்து நடக்க இயலாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் தனது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்ற சுகன்யா, தனது பள்ளித்தோழி எப்ஸியாவை சந்தித்துள்ளார்.

நீண்டநாள் பழகிவிட்டு பிரிந்து சென்ற இருவரும் மீண்டும் மனம் விட்டு பேசி ஒருவருக்கு ஒருவர் செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு மீண்டும் நட்பை தொடர்ந்துள்ளனர்.

அப்போது சுகன்யா தனது கணவருக்கு விபத்து நடந்திருப்பது பற்றியும், அதனால் தன்னுடைய வாழ்க்கையில் தினமும் சோதனையாக இருப்பதாகவும் சொல்லி அழுதுள்ளார்.

அப்போது எப்ஸியோ, “நான் இருக்கேன்.. நீ எதுக்கும் கவலைப்படாதே.. என்கூட வந்துடு.. புதுசா ஒரு வாழ்க்கையை தொடங்கலாம்” என்று சொல்லி உள்ளார்.

அவரது ஆறுதல் பேச்சில் மயங்கிய சுகன்யா, உடனே தன்னை அழைத்து சென்றுவிடுமாறு கூறி அடம் பிடித்துள்ளார்.

மேலும் தங்களது குடும்ப வாழ்க்கையை தொடர ஏதுவாக தனது பெயரை ஜெய்ஸன் ஜோஸ்வா என்று மாற்றிக் கொண்ட எப்ஸியா, அறுவை சிகிச்சைகள் மூலம் தன்னை திருநம்பியாக மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.