பேருந்துக்கு நெருக்கமாக சென்ற பெண்…’சென்னையில் நடந்த கோர விபத்து’… ‘நெஞ்சை பிழியும் வீடியோ’!

0
153

சென்னை ஓட்டேரியில் மாநகரப்பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓட்டேரி சாலையில் போக்குவரத்து நெரிசலில் மாநகர பேருந்து நின்று கொண்டிருந்தது.

அப்போது பேருந்தின் முன்புறத்தில் மிக நெருக்கமாக பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது ஓட்டுனர் பார்க்க முடியாமல், பேருந்தை இயக்கியதால் அந்த பெண் மீது பேருந்து மோதியது. இதில் பேருந்தின் முன் சக்கரம் பெண் மீது ஏறி இறங்கியது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலியே அந்த பெண் உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.