வெளிச்சத்துக்கு வந்த முரண்பாடு!! -சுபத்திரா (கட்டுரை)

0
106

21/4 தாக்­கு­தல்கள் தொடர்­பாக விசா­ரிக்கும் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு, இரண்­டா­வது தட­வை­யாக இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்­கவை கடந்­த­வாரம் சாட்­சி­ய­ம­ளிக்க அழைத்­தி­ருந்­தது.

இரண்­டா­வது சாட்­சி­யத்தின் போது, இரா­ணுவத் தள­பதி லெப். ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க, அரச புல­னாய்வுப் பிரி­வு­க­ளுக்கு இடையில் ஒருங்­கி­ணைப்பு இருக்­க­வில்லை என்று கூறி­யி­ருக்­கிறார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக விடுக்­கப்­பட்ட புல­னாய்வு எச்­ச­ரிக்கை குறித்து தாம் அறிந்­தி­ருக்­க­வில்லை என்றும், அந்த எச்­ச­ரிக்கை கடிதம் தமக்கு அனுப்­பப்­ப­ட­வில்லை என்றும் அவர் சாட்­சியம் அளித்­தி­ருக்­கிறார்.

ஏப்ரல் 9ஆம் திகதி அரச புல­னாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜய­வர்த்­த­ன­வினால் தேசிய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிசிர மெண்டிஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர ஆகி­யோ­ருக்கு அந்த எச்­ச­ரிக்கை கடிதம் அனுப்­பப்­பட்­டது.

ஆனால், அந்த எச்­ச­ரிக்கை கடிதம் இரா­ணு­வத்­துக்கோ இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வுக்கோ அனுப்­பப்­ப­ட­வில்லை என்றும் அவ்­வாறு அனுப்­பி­யி­ருந்தால் தாக்­கு­தல்­களை தடுப்­ப­தற்­கான உரிய நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்க முடியும் என்றும் லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க கூறி­யி­ருக்­கிறார்.

அவர் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு முதல்நாள் கொழும்பில் நடந்த நிகழ்வில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், இதே குற்­றச்­சாட்டைத் தான் கூறி­யி­ருந்தார்.

பாது­காப்பு அதி­கா­ரிகள் உரிய நேரத்தில் தன்னை எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்தால், தாக்­கு­தல்­களைத் தடுத்­தி­ருப்பேன் என்று அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதே­வி­த­மான கருத்­தையே இரா­ணுவத் தள­ப­தியும் கூறி­யி­ருக்­கிறார்.

இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்­கவின் கீழ் 5000இற்கும் அதி­க­மான புலனாய்­வா­ளர்­களைக் கொண்ட பலம்­மிக்க இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவு இருந்­த­போதும், அவர்­களால் இந்த தாக்­கு­தல்­களை முன் உணர முடி­ய­வில்லை என்­பதை அவர் ஒப்புக் கொள்ளத் தயா­ராக இருக்­க­வில்லை.

2017ஆம் ஆண்டு, காத்­தான்­குடி பகு­தியில் சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவ­ரது குழு­வினர் பிரச்சினை­களை ஏற்­ப­டுத்தத் தொடங்­கி­யி­ருந்­தனர்.

அப்­போது, கிழக்குப் பிராந்­திய இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த மேஜர் ஜெனரல் லால் பெரேரா, தாம் சஹ்ரான் ஹாசிம் உள்­ளிட்­ட­வர்­களை அழைத்து எச்­ச­ரித்து அனுப்­பி­ய­தாக சாட்­சியம் அளித்­தி­ருக்­கிறார்.

_106600602_a07beecd-cf7a-4716-9800-4626173a2e17

ஆக, சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவ­ரது குழு­வினர் தொடர்­பான எச்­ச­ரிக்­கையை அரச புல­னாய்வுச் சேவையோ, தேசிய புல­னாய்வு பணி­ய­கமோ அல்­லது வெளி­நாட்டுப் புல­னாய்வு அமைப்­பு­களோ தான் தர வேண்டும் என்று இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவு காத்­தி­ருந்­தி­ருக்க வேண்­டி­ய­தில்லை.

இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவு பலம்­மிக்­க­தாக இருந்­த­போதும்- குறிப்­பிட்ட ஒரு விட­யத்தை நோக்­கியே (விடு­தலைப் புலிகள்) அதன் செயற்­பா­டுகள் மைய நிலைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. அதனால், வேறு பக்கம் அவர்­களால் சிந்­திக்­கவோ அது­பற்றி ஆரா­யவோ தெரிந்­தி­ருக்­க­வில்லை.

இது இரா­ணு­வத்­துக்குள் இருந்த முக்­கி­ய­மான பிரச்­சினை. இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவின் இந்த பல­வீ­னத்தை, வேறு­வி­த­மாக சிலர் அடை­யா­ளப்­ப­டுத்த முனை­கின்­றனர்.

2015 ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், பல்­வேறு குற்­றச்­செ­யல்கள் தொடர்­பாக புல­னாய்வுப் பிரிவைச் சேர்ந்­த­வர்கள் கைது செய்­யப்­பட்டு, தடுத்து வைக்­கப்­பட்டு, விசா­ரிக்­கப்­பட்­டதால் தான், புல­னாய்வுப் பிரிவு பல­வீ­னப்­பட்டு விட்­ட­தாக, காட்­டு­வ­தற்கு பல்­வேறு தரப்­பு­களும் முயற்­சிக்­கின்­றன.

தற்­போ­தைய அர­சாங்­கத்தை எதிர்க்­கின்ற எல்லாத் தரப்­பு­களும், இதனை ஒரு குற்­றச்­சாட்­டாக முன்­வைத்து வரு­வதை காண முடி­கி­றது,

கடந்­த­வாரம் கூட, முன்னாள் அமைச்­சரும் தற்­போது எதிர்க்­கட்சி வரி­சையில் அமர்ந்­தி­ருப்­ப­வ­ரு­மான விஜே­தாஸ ராஜபக் ஷ பாரா­ளு­மன்­றத்தில் இதனைக் கூறி­யி­ருந்தார்.

2015ஆம் ஆண்­டுக்குப் பின்னர், புல­னாய்வுப் பிரிவைச் சேர்ந்த 320 பேரிடம் விசா­ர­ணைகள் நடத்தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், இதனால் புல­னாய்வுக் கட்­ட­மைப்­புகள் பல­வீ­ன­ம­டைந்­துள்­ளன என்றும், அவர் குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

10 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான புல­னாய்வுப் பிரி­வினர் இலங்கை அர­சாங்­கத்தின் கீழ் பணி­யாற்­று­கின்ற நிலையில், அவர்­களில் 320 பேர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டதால், நாட்டின் பாது­காப்பு பல­வீ­னப்­பட்டுப் போன­தாக கூறு­வது வேடிக்கை.

விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லானோர் மீண்டும் சேவையில் சேர்த்துக் கொள்­ளப்­பட்டு விட்­டனர் என்­பது தான் உண்மை.

அதை­விட, தெரி­வுக்­கு­ழுவில் சாட்­சி­ய­ம­ளித்த இரா­ணுவ அதி­கா­ரிகள், பாது­காப்புத் தரப்­பினர், புல­னாய்வுப் பிரி­வினர் சிலர் கைது செய்­யப்­பட்­டதால் புல­னாய்வுப் பிரி­வுகள் பல­வீ­ன­ம­டைந்து விட்­ட­தாக கூறப்­ப­டு­வது தவறு எனக் கூறி­யி­ருந்­தனர்.

அவ்­வாறு கூறி­ய­வர்­களில் தற்­போ­தைய பாது­காப்புச் செயலர் ஜெனரல் சாந்­த­கொட்­டே­கொ­டவும் ஒரு­வ­ராவார்.

ஆனால், கடந்­த­வாரம் இரா­ணுவத் தள­பதி அளித்­துள்ள சாட்­சி­யத்தில் கூறி­யி­ருக்­கின்ற சில விட­யங்கள், புல­னாய்வுப் பிரி­வினர் மீதான விசா­ர­ணை­க­ளுக்கும், பாது­காப்பு பல­வீ­னத்­துக்கும் தொடர்­புகள் இருப்­ப­தான கருத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அதா­வது, இரா­ணுவ புல­னாய்வுப் பிரி­வுக்கும், பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரி­வுக்­கு­மி­டையில், சரி­யான புரிந்­து­ணர்வு- ஒத்­து­ழைப்பு இருக்­க­வில்லை, அவ­நம்­பிக்­கை­யான சூழல் இருந்­தது என்­பதை அவர் ஏற்றுக் கொண்­டி­ருக்­கிறார்.

இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவு தமக்குக் கிடைக்கும் புல­னாய்வுத் தக­வல்­களை, பொலிஸ், விமா­னப்­படை, கடற்­படை புல­னாய்வுப் பிரி­வுகள், விசா­ரணைப் பிரி­வு­க­ளுடன் பகிர்ந்து கொண்ட­தா­கவும், பல தக­வல்­களை அரச புல­னாய்வு சேவை, தேசிய புல­னாய்வுப் பிரிவு, பொலிஸ்மா அதி­ப­ருக்கு வழங்­கி­ய­தா­கவும் இரா­ணுவத் தள­பதி கூறி­யி­ருக்­கிறார்.

பல்­வேறு வழக்­குகள் தொடர்­பான இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வினர் கைது செய்­யப்­பட்­டதை அடுத்து, இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வுக்கும், பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரி­வுக்கும் இடையில் அவ­நம்­பிக்கை காணப்­பட்­டது என்­பதை அவர் ஒப்புக் கொண்­டி­ருக்­கிறார்.

2015இற்குப் பின்னர் கிளி­நொச்­சியில் தற்­கொலைக் குண்டு அங்­கிகள் மீட்­கப்­பட்­டமை தொடர்­பான விசா­ர­ணை­க­ளுக்கு பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவு ஒத்­து­ழைக்­க­வில்லை என்றும், பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவின் முன்­னைய தலை­மை­யுடன் அவ­நம்­பிக்­கை­யான சூழல் இருந்­தது எனவும், இப்­போது புதிய தலை­மை­யுடன் அவ்­வா­றான நிலை இல்லை எனவும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

எல்லா வழக்­கு­க­ளிலும் இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவு பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரி­வுக்கு ஒத்­து­ழைத்­த­தாக இரா­ணுவத் தள­பதி கூறி­யி­ருந்­தாலும், நீதி­மன்­றங்­களில் குற்ற விசா­ரணைப் பிரிவும், பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவும் அளித்­தி­ருந்த அறிக்­கைகள் அதற்கு நேர்­மா­றா­னவை.

இரா­ணுவத் தலை­மை­யகம், இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவு என்­பன பல்­வேறு வழக்­கு­களை விசா­ரிப்­ப­தற்கு ஒத்­து­ழைக்­க­வில்லை என்று குற்ற விசா­ரணைப் பிரிவும், பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவும் நீதி­ப­தி­க­ளுக்கு அறிக்­கை­களை அளித்­துள்­ளன.

இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவைச் சேர்ந்­த­வர்கள் குற்­றம்­சாட்­டப்­பட்ட பல வழக்­கு­களில், இன்­னமும் புலன் விசா­ர­ணையை சரி­யாக முன்­னெ­டுக்க முடி­யாமல் இருப்­ப­தற்கு அவர்­களின் ஒத்­து­ழைப்பு கிடைக்­கா­ததே காரணம் என விசா­ர­ணை­யா­ளர்கள் கூறி­யி­ருந்­தனர்.

ஆனால், அந்தக் குற்­றச்­சாட்­டு­களை இரா­ணுவம் நிரா­க­ரித்து வந்­தாலும், அந்த வழக்­கு­களால், பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரி­வுக்கும் இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வுக்கும் இடையில் அவ­நம்­பிக்கை நில­வி­யது என்ற உண்­மையை இப்­போது உடைத்­தி­ருக்­கிறார் இரா­ணுவத் தள­பதி.

இங்கு, பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவு மற்றும் குற்ற விசா­ரணைப் பிரிவு என்­ப­னவே, குற்றச் செயல்கள் குறித்த விசா­ர­ணை­களில் பங்­கேற்­றி­ருந்­த­ன­வே­யன்றி, ஏனைய அரச புல­னாய்வு அமைப்­புகள் இந்த விசா­ர­ணை­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ருக்­க­வில்லை.

இரா­ணுவ புல­னாய்வுப் பிரி­வுக்கும், பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவு மற்றும் குற்ற விசா­ரணைப் பிரி­வுக்கும் இடையில் தான் புரிதல் குறை­பாடு இருந்­ததே தவிர, அரச புல­னாய்வு சேவை, தேசிய புல­னாய்வுப் பிரிவு என்­ப­ன­வற்­றுடன் எந்த சிக்­கலும் இருக்­க­வில்லை.

அவ்­வா­றான நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான முன்­னெச்­ச­ரிக்கை விட­யத்தில் ஒத்­து­ழைப்புக் குறை­பா­டுகள் இருந்­தி­ருக்க வாய்ப்­புகள் இல்லை. அவ்­வா­றான குறை­பா­டுகள் இருந்­தன என்று நிறுவ முற்­ப­டு­வதும் தவறு.

அதை­விட குற்­றங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என ஒரு அரச விசா­ரணைப் பிரிவு புல­னாய்வு விசா­ர­ணை­களில் ஈடு­படும் போது, அதனை இன்­னொரு அரச புல­னாய்வுப் பிரிவு சகித்துக் கொள்­ளாமல், முரண்­ப­டு­வதும், அதற்கு ஒத்­து­ழைக்க மறுப்­பதும் சிக்­க­லா­னதே.

தண்­டனை அல்­லது விசா­ரணை வளை­யத்தில் இருந்து தமக்கு விலக்கு அளிக்­கப்­பட வேண்டும் என்று இந்த புலனாய்வு அமைப்புகள் அல்லது பாதுகாப்பு அமைப்புகள் எதிர்பார்க்கின்றன.

இலங்கையில் தண்டனையிலிருந்து தப்பித்தல் என்பது முக்கியமானதொரு பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் இந்த விவகாரம் பேசப்படுகிறது.

ஐ.நாவின் அறிக்கைகளில் தண்டனையிலிருந்து படையினர் தப்பித்தல், முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டாலும், அந்த மனோநிலையில் இருந்து இலங்கைப் படையினர் மாறவில்லை.

இராணுவத் தளபதியின் சாட்சியத்தில், தமது புலனாய்வுப் பிரிவுக்கும், பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கும் அவநம்பிக்கை நிலவியது என கூறியிருந்ததானது, தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு அவர்கள் உதவவில்லை என்ற காழ்ப்புணர்வில் இருந்து எழுந்த சிக்கல் தான்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முற்கணிப்புகளை செய்யத் தவறிய புலனாய்வு அமைப்புகள், இப்போது பல்வேறு காரணங்களைக் கூறி திசை திருப்ப முற்படுகின்றன. இராணுவத் தளபதியின் சாட்சியமும் அதனைத் தான் நிரூபித்திருக்கிறது.

-சுபத்திரா

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.