கள்ளக்காதலனுடன் செம ஜாலி.. பாலுக்காக அழுத ஒரு வயது குழந்தையை.. அடித்தே கொன்ற தாய்.. நெல்லையில் ஷாக்

0
511

நெல்லை: நடுராத்திரி.. ஒரு வயசு குழந்தை பசியில் பாலுக்காக அழுதது.. ஆனால் அந்த நேரத்தில் கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருந்த பெற்ற தாயோ, அந்த குழந்தையை அடித்தே கொன்றுள்ளார்.

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா பழங்கோட்டை பாரத ஸ்டேட் வங்கி எதிரில் வசிப்பவர் ராஜ்.

இவருக்கு வயது 45. பழங்கோட்டை ஈ.பி. ஆபீசில் வேலை பார்க்கிறார். வடகாசி என்ற 35 வயது மனைவியும், தானேஷ் பிரபாகரன் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் இருந்தது.

இந்த விஷயம் ராஜ்-க்கு தெரிந்துவிட்டது. அதனால் மனைவி வடகாசியை கண்டித்தும் வடகாசி கேட்கவே இல்லை.

தங்கள் கள்ளக்காதலை தொந்தரவு செய்தால், குழந்தையை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார்.

இதனால் பயந்துபோன ராஜ், சில தினங்களுக்கு முன்பு குழந்தையை சங்கரன்கோவிலில் உள்ள மாமனார் செல்லையா வீட்டில் விட்டிருந்தார்.

இந்நிலையயில், நேற்று முன்தினம் ராஜ், “குழந்தையை பார்க்க ஆசையாக உள்ளது, உன் வீட்டில் இருந்து குழந்தையை வாங்கி வா” என்று அனுப்பி வைத்துவிட்டு கோவில்பட்டிக்கு ஒரு வேலையாக சென்றுவிட்டார்.

அதன்படியே அம்மா வீட்டுக்கு சென்ற வடகாசி, குழந்தையை தூக்கி கொண்டு தன் வீட்டுக்கு போகாமல், நேராக கள்ளக்காதலன் சாமிநாதனுடன் சென்றுவிட்டார்.

ராத்திரி வீடு திரும்பிய ராஜ், மனைவி, குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து மாமனாருக்கு போன் பண்ணி கேட்டபோது, எப்போதோ குழந்தையுடன் வடகாசி சென்றுவிட்டதாக சொன்னார்.

motherkilledherchildnearnellai3-1565072213
அப்போதுதான் ராஜ்-க்கு சாமிநாதன் மீது சந்தேகம் வந்து, அவர் வீட்டில் மனைவி இருக்கலாம் என்று நினைத்து அவரை தேடிக் கொண்டு நடுராத்திரி கிளம்பி போனார்.

சாமிநாதனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, 2 குழந்தைகள் இருந்ததால், கள்ளக்காதலிக்காகவே ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து வைத்திருந்தார்.

இப்போதும் அங்குதான் வடகாசியையும், குழந்தையையும் அழைத்து சென்றுள்ளார். நள்ளிரவு நேரத்தில், இருவரும் ஜாலியாக இருந்திருக்கிறார்கள். ஆனால் குழந்தையோ பசிக்காக அழுதிருக்கிறது.

அப்போது தங்களுக்கு இடையூறாக குழந்தையின் சத்தம் இருப்பதாக உணர்ந்து பெற்ற தாயும், சாமிநாதனும், சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர்.

ஏற்கனவே பசியில் அழுத குழந்தை வலி பொறுக்காமல் கதறி அழுதது. அப்போதுதான் ராஜ், தன்னுடைய குழந்தை அழும் சத்தத்தை கேட்டு, சாமிநாதன் வீட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே போனார்.

கண்முன்னே நடந்த அநியாயம், குழந்தை வலியால் அழுததை கண்டு பதறி போய் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் சாமிநாதன் தப்பி ஓடிவிட்டார்.

பிறகு காயமடைந்த குழந்தையை உடனடியாக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ராஜ் ஓடினார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து ராஜ் அளித்த புகாரின்பேரில், சாமிநாதன், வடகாசி 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ஜாலியாக இருந்தபோது, குழந்தை அழுததாகவும், அதனால் அடித்து கொன்றதாகவும் இருவரும் வாக்குமூலம் அளித்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.