அமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்!!:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்!!: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)

0
818

அமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை பிரபாகரன் தொிவு செய்தார்.

ஒருவர் விசு, புலிகள் இயக்க உளவுப்பிரிவுப் பொறுப்பாளர். சொந்தப் பெயர் இராசையா அரவிவிந்தராம். சொந்த இடம் நெல்லியடி.

இன்னொருவர் அலோசியஸ். இவர் பிரபாகரனின் நம்பிக்கையானவர். பிரபாகரனின் மெய்க்காவலர்களில் ஒருவராக இருந்தவர்.

சொந்த இடம் இளவாளை. மூன்றாமவரின் பெயர் சிவகுமார். புலிகளின் பிரதித்தலைவராக இருந்த மாத்தையாவின் மெய்காவலர்தான் சிவகுமார். முல்லைதீவு புதுக்குடியிருப்பை சேர்ந்தவர்.

mankayakkarasi-a

அமிர்தலிங்கத்தை நாள் தீாத்துக்கட்ட நாள் குறித்தபோது, அரசுக்கும் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்கள் பல கட்டங்களை தாண்டியிருந்தன.

புலிகளின் இயக்க பிரதி தலைவர் மாத்தையா பேச்சில் கலந்துகொள்ள தொடங்கியதுடன், புலிகளின் பிரதிநிதிக் குழுவுக்கும் தலமைதாங்கினார்.

புலிகளின் பிரதிநிதிகள் குழுவில் இருந்த பலருக்கே அமிர்தலிங்கத்தை தீாத்துக்கட்டபோகும் செய்தி தெரியாது.

எனினும், 1977ம் ஆண்டு தமிழ் மக்களிடம் தமிழீழ தனியரசை அமைப்பதாக பெற்ற ஆணையை கைவிட்டு துரோகம் செய்தமைக்காக புலிகளால் மரணதண்டணை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதல் பெயராக இருந்தது அமிர்தலிங்கத்தின் பெயர்தான்.

அது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், இரகசியம் காத்தலில் குறியாக உள்ள பிரபாகரன, அமுதரை தீாத்துக்கட்ட நாள் குறித்ததை யாரிடமும் கூறவில்லை.

பிரபா, மாத்தையா தவிர, சம்பந்தப்பட இருந்த மூவருக்கு மட்டும்தான் அது தெரிந்திருந்தது.

காரணம் என்ன??

கூட்டணியில் பல தலைவர்கள் இருந்தும் அமிர்தலிங்கத்தை மட்டும் முதல் இலக்காக கொள்ள காரணம் இருந்தது.

1977ம் ஆண்டு தமிழீழம் அமைக்கும் முடிவுக்கான கருத்துக்கணிபில் கூட்டணியினர் அமோக வெற்றி பெற்றனர்.

அதன் பின்னர் பாரிய இனக்கலவரம் நடைபெற்றது. ” அரச படைகள் தமிழருக்கு பாதுகாப்பளிக்க தவறினால், இந்த நாட்டில் தமிழரின் பாதுக்காப்புக்கு உத்தரவாதம் இல்லையானால், தங்கள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை தமிழர்களே செய்துகொள்ள வேண்டி ஏற்படும்” என்று அமுதர் பேசினார்.

பிரபாகரன், உமாமகேஸ்வரன் போன்றோருடன் பிரியமாக இருந்ததுடன், அவர்களை தட்டிக்கொடுத்தும் வந்தவர் தளபதி அமிர்தலிங்கம்.

தந்தை செல்வா இறந்தபோது இளைஞர்கள் உட்பட தமிழ்பேசும் மக்கள் அனைவரும் துயருமுற்றனர்.

அந்த துயர் மத்தியிலும் புதிய நம்பிக்கை துளிர்விடவே செய்தது.

அந்த நம்பிக்கை என்ன தெரியுமா?? ” தந்தைக்குப் பின்னர் தளபதிதானே தலைவர். இனியென்ன ஆயுதப் போராட்டத்துக்கு அமுதர்தான் தளபதி. வீறுகொண்டெழப்போகிறது விடுதலை இயக்கம்” என்று இளைஞர்கள் நம்பினார்கள்.

அமுதரும் அதற்கு ஏற்பதான் பேசிக்கொண்டிருந்தார்.

யாழ்பாண கந்தர் மடத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. வண்ணை ஆனந்தன் பொலிசாரை நாய்கள் என்று திட்டிக்கொண்டுநந்தார். “உங்கள் கையில் இருப்பது ஒருநாள் எங்கள் கையில் இருக்கும்” என்று தன் வழக்கமான முழக்கத்தை எழுப்பிக் கொண்டிருந்தார்.

அமுதர் தன் வழக்கமான புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் அமுதர் பேச எழுந்தார். கேள்விகள் தாள்களில் எழுதிக் கொடுக்கப்பபட்டன.

இத் தொடரை எழுதும் அடியேனும் ஒரு கேள்வி எழுதிக் கொடுத்தேன்.

“காந்தியப் பாதையில் தமிழீழம் கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை. கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்”

கேள்வியை வாசித்துக் காட்டிவிட்டு அமுதர் பதிலளித்தார். “தமிழீழத்தை அடைய அகிம்சைப் பாதையில் செல்ல முடியவில்லை என்றால் அதற்கு மாற்றுத்திட்டம் வைத்திருக்கிறோம். அதனை இங்கே வெளியிடுவது சரியாக இருக்காது” அமீர் குரலில் கணீரென்று வந்தது பதில்.

அகிம்சை பாதை தோல்வி கண்டால் மாற்றுத்திட்டம் என்பது ஆயுதப் போராட்டம்தான் என்பது சொல்லித்தானா தொியவேண்டும். பதிலை கேட்ட எங்களுக்கு பரம திருப்தி. தளபதி என்றால் தளபதிதான் எனப்பெருமிதம்.

எண்ணற்ற இஞைர்களின் அளவற்ற பாசத்தை அமுதர் பெறக் காரணம் அவர் காந்தியம் பற்றிப் பேசியதால் அல்ல.

அன்று அமுதரின் நிழலில் குளிர்காய்ந்தவர்களும். கணக்கில் எடுக்கப்படாதவர்களும் தான் இன்று கூட்டணியின் தலைவர்களாக பாத்திரம் ஏற்று பவனி வருகிறார்கள். இவர்கள்தான் “நாங்கள் காந்தியவாதிகள்” என மனசறிந்து பொய் கூறுகிறார்கள்.

இதே கூற்றை அமுதரும் பிற்காலத்தில் கூறினார்.அன்றுதான் இளைஞர்களின் மனங்களில் இருந்து அவர் சரிந்து விழுந்தார்.
“சில ஆயுதங்களை வைத்துக் கொண்டு தமிழீழம் பெறலாம் என நினைக்கக்கூடாது. இளைஞர்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும்” என்றார். அப்போது அவர் எதிர்கட்சி முதல்வர்.

அழைப்பு

அமுதரை சுற்றி இருக்கும் சிவசிதம்பரம் போன்ற வயதான தலைவர்கள்தாள் அவரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது.

“இளைஞர் குரல்” என்றொரு பத்திரிகையில், “அமிர் அண்ணா உங்களைச் சுற்றியிருக்கும் சுவர்களைக் கடந்து வாருங்கள் எங்களுக்கு தலைமை தாருங்கள்” என உருக்கமாக அழைப்பும் விடுக்கப்பட்டது.

M.Sivasithamparam

M.Sivasithamparam

சிவசிதம்பரம் போன்றவர்கள் அமிரின் நிழலில் நின்றதால் இளைஞர்களால் மதிக்கப்பட்டார்கள். தலைவர்கள் என்ற ஸ்தானத்தில் வைத்தோ, இவர்கள் தமிழீழம் பெறப் போராடக் கூடியவர்கள் என்றோ யாரும் அவர்களை நம்பியதில்லை.

அதிலும் சிவசிதம்பரம் பற்றி இருந்த அபிப்பிராயம், முதுகெலும்பு இல்லாதவர் என்பதுதான், யாரையாவது சார்ந்துதான் நிற்பார். (தற்போதும் கூட நீலன், சம்பந்தன் போன்றோரை சார்ந்து நின்று அவர்கள் சொற்படி தீர்வுப் பொதியை ஆதரித்துப் பேசிவருகிறார்.)

இதுபற்றி எழுதுவதானால் விரிவாக எழுதலாம். இங்கே இடம் இல்லை.

அமிர் மீதே சகல நம்பிக்கைகளும் இருந்தமையால், அமிர் பின்னர் பாராளுமன்ற மாயைகளில் சிக்கிக் கொண்டபோது, இளைஞர்களின் கோபமும் அவர்மீதுதான் பிரதானமாகத் திரும்பியது.

புலிகள் முதல் இலக்காக அமிர்தலிங்கத்தை தொிவு செய்தமைக்கும் அதுதாள் காரணமாக அமைந்தது.

யுளுளுளுளுசந்திப்பு

கூட்டணிக்குள் அமிர்தலிங்கத்துக்கு அடுத்தாக இளைஞர்களின் நன்மதிப்பைப் பெற்றவர் யோகேஸ்வரன்.

பழக இனியவர். பண்பாளர். இளைஞர் பேரவைத் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்ட காலகட்டத்தில், இளைஞர் பேரவை பணிகளில் முன்னின்றவர்.

கூட்டணிக்குள் ஆயுதப் போராட்ட இயக்கங்களுடன் தொடர்பாக இருந்தவர்களில் அமிர்தரும், யோகேசுவுருனம்தான் முக்கியமானவர்கள்.

இத்தனைக்கும் பிரபாகரன், குட்டிமணி, தங்கத்துரை என்று பலர் வடமராட்சியைச் சேர்ந்தவர்கள். சிவசிதம்பரமும் வடமராட்சிதான். ஆனால் சிவசிதம்பரத்தை நம்பி அவருடன் யாரும் தொடர்பு வைத்ததில்லை.

ஆயினும் சிவசிதம்பரம் இணைச் செயலதிபர் என்ற முறையில் கூட்டணிக்கும் போராளிக் குழுக்களுக்கும் இடையே உள்ள தொடர்புகளை அறிந்தே இருந்தார். இப்போது மறுக்கக்கூடும்.

யோகேஸ்வரன் புலிகளுடனும், பிரபாகரனுடனும் அனுதாபமாக இருந்தார். அமுதர்மீதும் மட்டற்ற விசுவாசம் இருந்தது.

அந்த விசுவாசம் மட்டும் இல்லையென்றால் யோகேஸ்வரன் புலிகளுடன் இரண்டறக் கலந்திருந்தாலும் ஆச்சரியமில்லை.

யோகேஸ்வரனை தீர்த்துக் கட்டுவது என புலிகள் திட்டமிடவும் இல்லை. அமுதருடன் சிவசிதம்பரமோ அல்லது வேறு யாருமோ வந்தால், சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களையும் போட்டுவிடலாம் என்பது தான் உத்தரவு.

வந்தனர்

13.7.89 அன்று மாலை 6.30 மணியளவில் அமுதரைச் சந்திக்கலாம் என விச்சுவுக்கு தகவல் தந்தார் யோகேஸ்வரன்.

அப்போது கொழும்பு புல்லர்ஸ் வீதியில் தான் கூட்டணியின் செயலகம் இருந்தது. அமீர், யோகேஸ், மாவை சேனாதிராஜா ஆகியோர் அங்குதான் தங்கியிருந்தனர்.

“இன்று அலோசியஸ் ஆட்கள் சந்திக்க வருகிறார்கள். சிற்றூண்டியும், குளிர்பானமும் தயாராக இருக்கட்டும்” என்று தன் மனைவியிடம் சொல்லி வைத்திருந்தார் யோகேஸ்.

அதேபோல. அமிர்தலிங்கத்தின் மெய்க் காவர்களிடமும் “அலோசியஸ் ஆட்கள் வருவார்கள். அவர்களைச் சோதனையிட வேண்டாம்” எனக் கூறினார் யோகேஸ்வரன்.

சோதனையிடுவது அவர்களைச் சந்தேகிப்பது போலாகிவிடும் எனக் கருதியே அவ்வாறு கூறியிருந்தார்.

நேரம் மாலை 6.30 மணி

புல்லர்ஸ் வீதி கூட்டணிச் செயலககேட் அருகே ஒரு டாக்ஸி வந்து நின்றது. அதில் இருந்து மூன்று இளைஞர்கள் இறங்கினார்கள். அவர்களது இடுப்பில் பிஸ்டலும், ரிவோல்வரும் இருந்தன.

கேட் அருகே வந்த அலோசியவஸை காவலர்கள் விசாரிப்பதற்கு இடையே, வீட்டின் மேல்மாடியில் நின்ற யோகேஸ்வரன் அவர்களைக் கண்டுவிட்டார்.

“அவர்களை மேலே விடுங்கள்” என்று காவலர்களுக்கு கட்டளையிட்டார் யோகேஸ்.
கேட திறந்தது மூவரும் உள்ளே நுழைந்தனர்.

அவர்களை மாடியில் அமரச் செய்துவிட்டு, கீழே அறையில் இருந்த அமிர்தலிங்கத்தையும், சிவசிதம்பரத்தையும் அழைத்தார் யோகேஸ்வரன்.

அவர்கள் கீழ் அறையில் தொலைக்காட்சியில் செய்திகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அமிரின் பாரியாரான மங்கையர்க்கரசி அமிர்தலிங்கமும் அங்கு இருந்தார்.

அவரையும் வருமாறு அமிர் அழைத்தார். வெளிநாட்டில் உள்ள தனது மகனிடம் இருந்து தொலைபேசி அழைப்பை எதிர் பார்த்துக் காத்திருந்தார் மங்கையர்க்கரசி.

“ஃபோன் வந்த பின் வருகிறேன். நீங்கள் போங்கள்” என்றார் மக்கைக்கரசி. போகத்தான் போகிறார் என்பது அப்போது அவருக்கு தொியாது. ‘தவம்’ என்றுதான் மனைவியை அழைப்பார் அமிர் என்று ஞாபகம்.

அமிர், சிவா ஆகியோர் மேலே சென்றதும், யோகேசும் அவர்களுடன் அமர்ந்தார்.

வந்தவர்கள் மூன்று பேர். கூட்டணியின் தரப்பிலும் மூன்று பேர்.

சுமுகமாகப் பேச்சுக்கள் நடந்தது கொண்டிருந்தன. இடைக்கிடையே யோகேஸ் வாய்விட்டடுச் சிரித்த சத்தம்கூட அவரது மனைவிக்குக் கேட்டது.

ளளளளளளளளளவேட்டொலிகள்

“குடிக்க என்ன வேண்டும்” என்று கேட்டார் யோகேஸ். வந்தவர்கள் பிஸ்கெட்டுக்களை சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

“இரண்டு பேருக்கு கூல், ஒருவருக்கு ரீ ” என்றனர். மனைவியிடம் கூறினார் யோகேஸ், வந்தது அருந்தினர்.

பேச்சின் இடையே “எங்கள் பாதையில் நாங்கள் போகிறோம். உங்கள் பாதையில் நீங்கள் போகிறீர்கள். யாரும் யார் பாதையிலும் குறுக்கிடாமல் இருந்தால் சரிதான்” என அமிர்தலிங்கம் கூறினாராம்.

“இந்தியப் படையினரின் வெளியேற்றத்தை கோரி அறிக்கை விடலாம்தானே” என்று கேட்டனர். “உடனடியாக படை வெளியேறத் தேவயில்லை” என்ற தனது நிலைப்பாட்டை அமிர் கூறினார்.

அச்சமயம் சிவகுமார் எழுந்து “பாத்ரூம் எங்கே?” என்று கேட்டுவிட்டு கீழே சென்றார். கீழே இறங்கி மாடிப்படியருகே நின்று கொண்டார்.

நேரம் 7.45 மணி. அமிரின் அருகில் இருந்த ரீப்போவில் கிளாசை வைத்த விசு, நிதானமாக தன் இடுப்பில் இருந்த பிஸ்டலை உருவினார்.

அமிருக்கும், யோகேஸ், சிவா ஆகியோருக்கும் தாங்கள் காண்பது கனவா, நனவா என்று சுதாகரிக்கவே நேரம் இல்லை.

விசுவின் பிஸ்டல் அமிரின் தலையை குறிவைத்து சுட்டது. நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையிலேயே சாய்ந்தார் அமிர்.

நிலையை உணர்ந்து சிவசிதம்பரம் பயத்தில் எழ, அவரை நோக்கி சுட்டார் அலோசியஸ். சிவா நிலத்தில் வீழ்ந்தார்.

அதேநேரம் அமிரை சுடாமல் தடுப்பதற்காக, யோகேஸ் குறுக்கே பாய்ந்து நிற்க, அமிரை நோக்கி சிவகுமார் சுட்ட ரவைகள் யோகேஸ்வரனின் மார்புப் பகுதியில் பாய்ந்தன.

maavai-seenaathirasaமாவை சேனாதிராஜா

உள்ளே துப்பாக்கி வேட்டுக்கள் கேட்டதும் தன் அறையில் இருந்த மாவை சேனாதிராஜா வெளியே ஓடிவர முயன்றார். அவரது மனைவி பயத்தில் தடுத்துவிட்டார்.

வேட்டுச் சத்தம் கேட்டதும் அமிரின் மெய்க்காவலர்கள் அச்சமின்றி துரிதமாகச் செயற்பட்டனர்.

சுட்டுவிட்டு மாடிப்படி வழியாகத்தான் வரவேண்டும் என்று அதன் அருகே நிலை எடுத்து நின்றனர்.

வேட்டுக்களைத் தீர்த்தபடி மாடிப்படியில் ஓட்டமாக இறங்கிய விசு சுடப்பட்டார்.

அதனை அடுத்து வந்த அலோசியஸ் மீதும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன.

அதே நேரம் கீழே நின்ற சிவகுமார் பாய்ந்து கேட் வரை தப்பிச் சென்றுவிட்டார்.

மாடியில் நின்ற கந்தசாமி என்ற சப் இன்ஸ்பெக்டது கேட் அருகே சென்ற சிவகுமாரை மேல் இருந்தே குறிவைத்துச் சுட்டதில் சிவகுமாரும் விழுந்தார்.

அமிருக்கு மெய்க் காவலராக இருந்த சிங்கள பொலிஸ்காரான நிசங்காதான் விசுவைச் சுட்டார். அமீர்மீது அந்தப் பொலிஸ்காரருக்கு தனிப்பட்ட ரீதியிலும் பிடிப்பு இருந்தது.

சிவசிதம்மரம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை காரணமாக உயிர் பிழைத்தார்.

அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோர் சுடப்பட்ட செய்தி ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு எட்டியபோது, அவர் முன்பாக மாத்தையா, அன்ரன் பாலசிங்கம், யோகி, திலகர் உட்பட புலிகளின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர்.

48359081_10155571209412132_9197720104161247232_n

பிரேமதாசாவுக்கும், புலிகளுக்கும் இடையே பேச்சு நடந்து கொண்டிருந்த நேரம்தான் அமிர் கொலை நடந்து முடிந்தது.

தனக்கு கிடைத்த செய்தியை பிரேமதாசா புலிகளின் பிரதிநிதிகளுக்கு கூறினார்.

பிரேமாவுக்கும் அது எதிர்பாராத அதிர்ச்சிச் செய்திதான்

உடனடியாக புலிகளின் பிரதிநிகள் ஹில்டன் ஹோட்டலுக்கு திரும்பினார்கள்.

அமிர் கொலைக்கு புலிகள்தான் காரணம் என்று செய்திகள் வுடச் சுட வெளியாகின.

புலிகள் அதனை மறுத்தனர். ஆனால் அமிர், யோகேஸ் கொலையில் பங்கு கொண்டு பலியானவர்கள் மூவரும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்பது மறைக்க முடியாத விடயமாக இருந்தது.

பலியான மூவரையும் பலருக்குத் தொிந்திருந்தது.

அதற்கும் புலிகளிடம் பதில் தயாராக இருந்தது. “அவர்கள் முன்பு எமது இயக்கத்தில் இருந்தவர்கள்தான். பின்னர் விலகிச் சென்று விட்டனர்” என்று கூறிவிட்டார்கள்.

ஆனால், ஒருவர் மட்டும் அப்போது வாய் திறந்திருந்தால் நடந்தது என்ன, நடந்த சந்திப்பின் நோக்கம் என்ன போன்ற விபரங்கள் வெளிப்பட்டிருக்கும்.

ஆனால், தலை தப்பியது தம்பிரான் புண்ணியம், வம்பை ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று நினைத்தார் அவர்.

கடைசிவரை அந்த கண்கண்ட சாட்சி உண்மையைச் சொல்லவே இல்லை.

அவர்தான் மு.சிவசிதம்பரம்.

முதுகெலும்பு இல்லாதவர் என்று இளைஞர்கள் முன்னர் அவரைப் பற்றி கருதியது நூற்றுக்கு நூறு உண்மையானது.

ஆனாலும் இன்றுவரை உள்மனதில் புலிகள் பற்றிய கோபம் சிவசிதம்பரத்துக்கு இருக்கிறது. மறைமுகமாக பழிவாங்கி வருகிறார்.

வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் புலிகளை பலவீனமாக்க வேண்டும் என்று அவர் கூறிவருவதும், வெளிப்படையாக மட்டும் புலிகளை தாஜா பண்ணிப் பேவுசதும் சமீபகால நிகழ்வுகள்.

பிரேமதாசாவுடன் பேச்சு நடைபெற்ற தருணம் என்பதால், புலிகள் மறுப்பு விட்டனர்.

ஆயினும் பிரபாகரன் தன் வாயால் மறுத்ததில்லை.

அரசுவுடன் பேச்சு முறிந்தபின்னர் விசுவுக்கு புலிகள் அஞ்சலி வெளியிட்டனர். மேஜர் தரம் வழங்கி விசு கௌரவிக்கப்பட்டார்.

1990 இல்தான் புலிகள் மாவிரர் தினம் அனுஷ்டிக்க ஆரம்பித்தனர்.

அந்த மாவீரர் தின உரையில் பிரபாகரன் கூறியது இது:

“தமிழீழத்தை கைவிட்டால் அமிர்தலிங்கத்துக்கு மட்டுமல்ல, நாளை பிராபகனுக்கும் மரணதண்டனைதான் வழங்கப்பட வேண்டும்”

(தொடர்ந்து வரும்)

அமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு! கொழும்புக்கு வந்தது குழு!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி 152)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.