குரங்கை விழுங்கிய கொமோடா டிரேகன் ! காணொளி இணைப்பு

0
419

இந்தோனேசியா தேசியப் பூங்காவில், கொமோடா டிரேகன் எனும் அரிய வகை ராட்சத பல்லி, நன்கு வளர்ந்த குரங்கு ஒன்றை முழுமையாக விழுங்கும் காணொளி வெளியாகியுள்ளது.

கொமோடா டிராகன் எனும் அரிய வகை ராட்சத பல்லியினம் இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படுகின்றன.

அழிந்துவரும் இந்த பல்லியினத்தைப் பாதுகாப்பதற்காக இந்தோனேசிய அரசு, கடந்த 1980ம் ஆண்டு சுமார் 30 தீவுகளையும் உள்ளடக்கிய 1,733  சதுர கிமீ பரப்பளவில், ‘கொமோடோ தேசியப் பூங்கா’ உருவாக்கியது.

இதையடுத்து, கடந்த 1991ம் ஆண்டு இப்பூங்கா யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இந்த பூங்காவிற்கு தினசரி இலட்சக் கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.

இதனிடையே, இங்கு வாழும் அரிய வகை பல்லிகளை பாதுகாக்க, கொமோடோ தேசிய பூங்காவை அடுத்த ஆண்டு முதல் மூட இந்தோனேசியா அரசு முடிவெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சில ஆய்வாளர்கள் சமீபத்தில் ‘கொமோடோ தேசியப் பூங்கா’ சென்று கொமோடா டிராகன் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ‘அனுமன் மந்தி’ எனும் குரங்கை, சுமார் 10 அடி நீளமுள்ள கொமோடா டிராகன் ஒன்று பிடித்தது.

பின்னர் அந்தக் குரங்கை, தலைப்பகுதியிலிருந்து அப்படியே விழுங்கியது. இந்தக் காட்சிகளை ஆய்வாளர்கள் தங்கள் கேமராவில் படம் பிடித்தனர். அந்த காணொளி தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

*