திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ரசிகை; மாதவன் அதிர்ச்சி!

0
262

அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனவர் நடிகர் மாதவன்.

அவருக்கு, துவக்கத்தில் இருந்தே பெண் ரசிககைகள் அதிகம் உள்ளனர்.

அவர் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும்போதே அவருக்கு திருமணம் ஆகி விட்டது என்பதால், பெண் ரசிகைகள் போனில் தொடர்பு கொண்டாலோ, சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொள்ள முயன்றாலோ, எச்சரிக்கையோடு நழுவி விடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவைத் தொடர்ந்து இந்தி படங்களிலும் நடித்து வந்த மாதவனுக்கு, இடையிடையே பெரும் இடைவெளி விழுவது வாடிக்கை.

இருந்தாலும், அசராமல் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் மாதவன், இறுதிச் சுற்று படத்தில் நடித்து, தன்னுடைய மவுசை கொஞ்சமும் குறையவில்லை என நிரூபித்தார்.

அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா படத்தில் நடித்து, மீண்டும் பரபரப்பான நடிகரானார்.

-18-தற்போது, இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கைக் கதையை தி ராக்கெட்டரி – நம்பி எபெக்ட்ஸ் என்ற பெயரில் படமெடுத்து வருகிறார்.

அந்தப் படத்தில் நம்பி நாராயணன் கேரக்டரில் நடிக்கும் அவரே, படத்தை இயக்குகிறார்.

தமிழ் தவிர வேறு மொழிகளிலும் தி ராக்கெட்டரி படம் வெளியான பின், மாதவனின் கிராப் மேலும் ஏறும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் மாதவன் தன்னுடைய படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

இதை கவனித்த அவரது ரசிகை ஒருவர், நான் உங்களின் தீவிர ரசிகை. தற்போது எனக்கு பதினெட்டு வயதாகிறது.

நான் உங்களை திருமணம் செய்து கொண்டால் அது தவறா? என கேட்டு இருக்கிறார்.

இதற்கு பதில் அளித்திருக்கும் மாதவன், உங்களுக்கு என்னை விட மிகச் சிறந்த நபர் ஒருவர் கணவராக அமைவார். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என கூறியிருக்கிறார்.

நடிகர் மாதவனுக்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறார். அவருக்கு வயது பதினெட்டு.

மகன் வயதில் இருக்கும் பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவது குறித்து, குறிப்பிட்ட அந்த ரசிகையை, மாதவனின் மற்ற ரசிகைகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.