மாதம் 20 கோடி ரூபாய் சம்பாதிக்கும் ஆறு வயது சிறுமி… 55 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி அசத்தல்.

0
193

6 வயதான சிறுமி ஒருவர் 55 கோடி ரூபாய் மதிப்பில் 5 மாடிகள் கொண்ட வீடு ஒன்றை வாங்கிய சம்பவம் தென் கொரியா நாட்டில் நடந்துள்ளது.

தென் கொரியா நாட்டை சேர்ந்த 6 வயது சிறுமியான அஹ்ன் ஹே ஜின் என்ற சிறுமி யூ-ட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். Boram Tube ToysReview மற்றும் Boram Tube Vlog என்ற இரு யூ-ட்யூப் சேனல்களை இந்த சிறுமி நடத்துகிறார்.

புதிதாக விற்பனைக்கு வரும் பொம்மைகளுடன் விளையாடி, அது எப்படி இருக்கிறது என்பதை கூறும் சேனல் தான் இது.

இந்த சிறுமியின் இரண்டு சேனல்களுக்கும் சேர்த்து மொத்தம் 30 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.

இதன் மூலம் அந்த சிறுமி மாதத்திற்கு 21.55 கோடி சம்பாதிக்கிறார். தற்போது இந்த சிறுமி தென் கொரியாவின் கங்னம் மாவட்டத்தின் சியோங்டம் டாங் என்ற இடத்தில் 5 மாடிகளை கொண்ட வீடு ஒன்றை 55 கோடி ரூபாய்க்கு வாங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

LEAVE A REPLY

*