ஆர்யாவுக்கு தமன்னா அனுப்பிய ஸ்வீட் எஸ்.எம்.எஸ்!

0
3211

சமீபகாலமாக நிறைய நடிகைகளின் நெஞ்சில் குடியிருந்து வருகிறார் ஆர்யா. நயன்தாரா, ஹன்சிகா என்று நீண்டு கொண்டே போன அந்த பட்டியலில் இப்போது தமன்னாவும் இடம்பிடித்திருக்கிறார். அதாகப்பட்டது….   (தம்மன்னா  படங்கள் இணைப்பு)

சமீபகாலமாக நிறைய நடிகைகளின் நெஞ்சில் குடியிருந்து வருகிறார் ஆர்யா. நயன்தாரா, ஹன்சிகா என்று நீண்டு கொண்டே போன அந்த பட்டியலில் இப்போது தமன்னாவும் இடம்பிடித்திருக்கிறார். அதாகப்பட்டது.

மாற்றான் படத்திற்கு முன்புவரை பெரிய கணக்கெல்லாம் போட்டுக்கொண்டிருந்தார் அப்படத்தின் டைரக்டரான கே.வி.ஆனந்த். ஆனால் அப்படம் கொடுத்த அதிர்ச்சி தோல்வி அவரது சினிமா கேரியரையே புரட்டிப்போட்டு விட்டது.

அடுத்து ரஜினியை இயக்கப்போவதே அவர்தான் என்ற சூழ்நிலைகள் நிலவிக்கொண்டிருந்த நேரத்தில், அப்படத்தின் தோல்வியால் அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளும் சத்தமில்லாமல் முடிவுக்கு வந்தன.

அதனால்  அடுத்து யாரை வைத்து எந்த மாதிரியான படம் எடுப்பது என்று  மாதக்கணக்கில ரூம் போட்டு யோசித்து வந்தார் கே.வி.ஆனந்த். அப்போதுதான், ஆர்யாவைக்கேட்டால் என்ன. அவரை மாதிரி நடிகர்களை வைத்து படமெடுத்தால் நிறைய யோசிக்க வேண்டியதில்லை.

சின்னதா ஒரு கதை ரெடி பண்ணினாலே போதும். அவர் சந்தானத்தையும் கூட சேர்த்துக்கொள்வார். அப்புறம் காமெடி போர்சனை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பெரும்பாலனா வசனங்களில் சந்தானம மெனக்கெடுவார். ஏதோ பேசிய டயலாக்கையே திரும்பவும் அவர்கள் ரிப்பீட் விட்டாலும், படப்ப்பெட்டியை சிரமமில்லாமல் விற்றுவிடலாம் என்று சிலர் ஐடியா கொடுக்க, அந்த பக்கம் சாய்ந்து விட்டார் ஆனந்த்.

இப்போது ஆர்யாவும் ஓகே சொல்ல, கதை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறார் அவர். இதற்கிடையில் யாரை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என்று இயக்குனர் யோசித்தபோது ,பழம் நழுவி பாலில் விழுந்த கதையாய், தமன்னாவை போடலாமே என்றாராம் ஆர்யா.

அதுவரை தனது அயன் பட நாயகியைப்பற்றி யோசிக்காத கே.வி.ஆனந்த், ஆர்யா எடுத்துக்கொடுத்ததால் இப்போது தமன்னாதான் நாயகி என்ற முடிவுக்கே வந்துவிட்டார். இந்த சேதியை கேள்விப்பட்ட தமன்னா, தான் மீண்டும் ஆனந்த் இயக்கத்தில் நடிப்பதற்கு முக்கிய காரணமான ஆர்யாவுக்கு பல இனிப்பான வார்த்தைகளை கோர்த்து ஸ்வீட்டான எஸ்எம்எஸ்களை அனுப்பி ஆர்யாவை தித்திக்க வைத்து விட்டாராம்.

விளைவு, இதுவரை தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் நயன்தாரா, ஹன்சிகா என்று புலம்பிக்கொண்டிருந்த ஆர்யா, இப்போது தமன்னாவின் பெயரை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.