‘துண்டிக்கப்பட்ட தும்பிக்கை’… உலகையே உலுக்கும் யானையின் புகைப்படம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்!

0
187

யானை ஒன்றின் தும்பிக்கையும், எஞ்சியிருக்கும் அதன் மொத்த உடல் பாகமும் இரண்டு துண்டுளாக தனித்தனியே பிரிந்து கிடக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் உலகை உலுக்கி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவின் போட்சுவானா நாட்டில், வனப்பகுதியில் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த ஆவணப்பட இயக்குநர் ஜஸ்டின் சுலிவெனின் ட்ரோன் கேமராவின் கண்களில் திடீரென்று பட்டதுதான் இந்த உயிரை உலுக்கும் யானையின் புகைப்படம்.

கடந்த 2014 முதல் 2018 ஆண்டுகளுக்கிடையில் 598 சதவீத யானைகள் கொல்லப்பட்டு, அவற்றின்  தந்தங்கள் கள்ளச் சந்தையில் களமிறக்கப்பட்டதாகவும், ஒரு நாளைக்கு குறைந்தது 100 யானைகளின் தந்தங்கள் இங்கு அறுக்கப்படுவதாகவும், இந்த புகைப்படத்தில் இருக்கும் யானையின் தந்தம் ரம்பம் கொண்டு சுமார் 20 நிமிடங்கள் அறுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த புகைப்படத்துக்கு பின், ஆய்வுகள் வெளியாகியுள்ளன.

டிஸ்கனெக்‌ஷன் என்று பெயரிடப்பட்ட இந்த புகைப்படம் ஆண்ட்ரி ஸ்டெனின் சர்வதேச புகைப்படப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

இதுபற்றி பேசிய ஜஸ்டின், இந்த புகைப்படத்தை டாப் ஆங்கிளில் இருந்து பார்த்தால்தான், அதன் வலியை நாம் உணர முடியும் என்றும் டிஸ்கனெக்‌ஷன் என்கிற வார்த்தை யானையின் தும்பிக்கை தனியே துண்டாகிக் கிடப்பதை மட்டுமல்லாமல், விலங்குகளின் மீதான அக்கறை, மனிதர்களிடம் இருந்து துண்டிக்கப்பட்டு தனியே கிடப்பதையும் குறிப்பதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

*