உண்மையிலேயே சரவணபவன் ராஜகோபால் எப்படி பட்ட மனிதர் தெரியுமா வெளிவரும் உண்மை தகவல்

0
636

உண்மையிலேயே சரவணபவன் ராஜகோபால் எப்படி பட்ட மனிதர் தெரியுமா வெளிவரும் உண்மை தகவல்

ஜீவஜோதியின் கணவரின் கொலைக்கு காரணமான சரவணபவன் ராஜாகோபாலின் மறுபக்கத்தைப் பார்த்தா, இவர் தான் இப்படியா? என்றளவிற்கு பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகெங்கும் தன்னுடைய சுவையால் சரவணபவன் ஹோட்டல் கிளைகளை பரப்பி வந்த, ராஜகோபால், ஒரு புறம் பெண்ணாசையால் கொலை செய்யும் அளவிற்கு சென்றாலும், அவர் தன் ஹோட்டல்களில் வேலை பார்த்த ஊழியர்கள் மீது மிகுந்த அக்கறையுடனே இருந்துள்ளார்.,

hajfhjahfjhafjhafhakjh

ஆரம்பத்தில் ஹோட்டல்களில் சுவையான உணவுகளை கொடுத்த போது, நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் விலை மலிவான மளிகைப் பொருட்களை வாங்கினால், நஷ்டம் ஏற்படாது, ஊழியர்களின் ஊதியத்தையும் குறைக்கலாம் என்று அதிகாரிகள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஆனால் ராஜகோபால் அது போன்று செய்யாமல் இது போன்று அறிவுரை வழங்கிய அதிகாரிகளை வேலையிலிருந்து நீக்கினார்.

அதன் தரமான உணவுகளை மட்டும் வழங்கிய அவர், ஊழியர்களின் பணிச் சூழலையும் நல்ல விதமாக வைத்திருந்ததே அவர் இந்த அளவிற்கு உயர காரணமாக இருந்தது.

சாப்பாடு தட்டின் மீது வாழை இலை வைக்கும் முறையை கொண்டு வந்தவர் ராஜகோபால் தான், அதற்கும் அவர் சொன்ன காரணம், வாழை இலை வைத்தால், ஊழியர்கள் தட்டு கழுவும் வேலை எளிதாகும் என்று கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து மாதந்தோறும் ஊழியர்களை முடி வெட்ட சொன்னதற்கு முக்கிய காரணம், முடி அதிகமாக இருந்தால், சாப்பாட்டுகளில் விழுந்துவிடும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90இதை தவிர்ப்பதற்கே அப்படி செய்துள்ளார். வேலை நேரத்தில் ஊழியர்களுக்கு சோர்வு ஏற்படக் கூடாது என்பதால் இரவு நேர சினிமா பார்க்க சரவண்பவன் ஊழியர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது.

சரவண பவன் ஹோட்டலில் சேர்ந்தால் கடைசி வரை பணிக்கு உத்தரவாதம் என்று நம்பி அப்போதிருந்த ஊழியர்கள் நம்பி சேர்ந்தனர்.

தங்கள் ஹோட்டல்களின் கிளைகளில் வேலை பார்க்கும், குடும்பத்தினர் வெளியூரில் வசித்து வந்தால், அவர்களுக்கு ஆண்டு தோறும் சிறப்பு விடுமுறை, அதுமட்டுமா?

ஒவ்வொரு ஊழியர்களின் முதல் இரண்டு குழந்தைகளின் கல்வி செலவுகளையும் இவரே ஏற்றுள்ளார்.

அதற்கு அவர், ஒரு ஊழியரின் குடும்பத்தை நல்லபடி பார்த்துக் கொள்ள வழிவகுத்தாலே போதும் அவரால் உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஜீவஜோதி கணவன் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியான் சரவணன் கோபால் இன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவர் சரிந்ததற்கு முக்கிய காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

திருமணம் ஆகி 2 மனைவிகள் இருந்தாலும், குடும்பத்தில் குட்டி குட்டி குழப்பங்களும், சின்ன சின்ன சிக்கல்களும் ராஜகோபால் வாழ்க்கையில் வந்து கொண்டே இருந்தன.

இதன் காரணமாகவே பிரச்சனைகளுக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் குடும்ப ஜோசியரை போய் சந்தித்தார் அவர், அப்போது அந்த ஜோசியரோ, நீங்கள் இளம்பெண்ணை 3-வதாக கல்யாணம் செய்தால், உங்கள் ஓட்டல் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது, வானளாவிய பணக்காரனாகி விடலாம். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று கூறியுள்ளார்.

இப்படி ஜோசியக்காரர் சொல்லும்போதே அண்ணாச்சிக்கு வயசு 50. இதனால் இளம்பெண்ணை யார் முன்வந்து கட்டி தருவார்கள்? எங்கெங்கோ தேடினார். கடைசியில் தான் ஹோட்டலில் வேலை பார்க்கும் மேனேஜரின் மகளான ஜீவ ஜோதி கண்ணில் சிக்கினார்.

அந்த பெண் ஒருவரை காதலிப்பது தெரிந்ததும், காதலித்தவரையே கல்யாணம் செய்து கொண்டது தெரிந்தும், பணத்தாசையை பெற்றோரிடம் காட்டினார் அவர், சில சொத்துக்களை கூட தருவதாக வாக்கு கொடுத்தார்.

பெற்றோர் மசிந்தனரே தவிர, ஜீவஜோதி மசியவில்லை. கட்டிய கணவனிடமே மனைவியை விட்டுத்தரும்படி வாய்கூசாமல் கேட்கும் அளவுக்கு வயசை மீறி நடந்து கொண்டார் ராஜகோபால். அதன்பிறகும் பணப்பேய் அவரை ஆட்டு ஆட்டு என ஆட்டுவித்தது.

தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபர், ஒரு பிரபல நபர், 50 வயதை தாண்டிய பெரிய மனிதன் என்பதை எல்லாம் தூக்கி எறிந்து கொலை திட்டத்துக்குள் தன்னை ஆட்படுத்தி கொண்டார்.

அதை நிறைவேற் முடிவு செய்தார். நீதிமன்ற படியை முதன்முதலாக ஜீவஜோதிக்காக ஏறினார். பணபலம், செல்வாக்கால் பலமுறை வந்தாலும், ஜீவஜோதி தந்த சாட்சியம் அவரை சுக்குநூறாக நொறுக்கி விட்டது.

தன்னை காட்டியே தர மாட்டார் என்று நம்பிய நேரத்தில் என் கணவருடன் என்னை அண்ணாச்சி சேரவே விடவில்லை.

அவருடன் உறவு வைத்து கொள்ள கூடாது. அதுமட்டுமின்றி எனக்கு பல வகையில் தொந்தவு தந்தார்.

கடைசியில் என் கணவனையும் கொன்றுவிட்டார் என்று சாட்சியம் தந்த பின்னரே தண்டனைவாசம் ராஜகோபாலை நெருங்கியது.

பிரமிக்கத்தக்க வளர்ச்சி இருந்தால்தான் என்ன? கோடி கோடியாய் பணம் கொட்டி கிடந்தால்தான் என்ன?

செல்வாக்கும் புகழும் குவிந்து கிடந்தால் என்ன, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாமல் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையும் ராஜகோபால் நாசம் செய்து கொண்டார்.

ஒருவேளை அண்ணாச்சி அந்த ஜோதிடரை சந்திக்காமல் இருந்திருந்தால், அண்ணாச்சி கண்ணில் ஜீவஜோதி படாமல் இருந்திருந்தால், ராஜகோபால் சாம்ராஜ்யத்தை யாரும் அசைத்து கூட பார்த்திருக்க முடியாது என்பது தான் உண்மை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.