மனைவியின்’.. போலீஸ் யுனிஃபார்மை வைத்து கணவர், தன் காதலியுடன் போட்ட ‘வேற லெவல்’ ப்ளான்

0
97

திருட்டு கும்பலைச் சேர்ந்த தனது காதலி கொள்ளையடிப்பதற்கு உதவும் வகையில், பெண் இன்ஸ்பெக்டரின் கணவர் ஒருவர், தன் மனைவியின் போலீஸ் யுனிஃபார்மை, காதலிக்கு கொடுத்துள்ள சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் பகுதியில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்த அந்த பெண்ணின் கணவர், இன்னொரு பெண்ணுடன் காதல் உறவில் இருந்து வந்துள்ளார்.

ஆனால் இந்த நபரின் காதலியோ, கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்றில் முக்கியமானவராக இருந்துள்ளார்.

இந்த சூழலில், தன் காதலி கொள்ளையடிப்பதற்கு வசதியாக, போலீஸாக பணிபுரியும் தன் மனைவியின் யுனிஃபார்ம் செட்டினை எடுத்து தந்து, காதலிக்கு போலியான ஒரு அடையாள அட்டையையும் தயார் செய்து தந்து, கொள்ளையடிக்கச் சென்ற தன் காதலியை, அந்த கொள்ளை கும்பலுடன் சந்தோஷமாக அனுப்பி வைத்திருக்கிறார்.

மேலும், இந்த கொள்ளை மூலம் கிடைக்கும் ஆதாயத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் இந்த நபர், தன் மனைவியின் யுனிஃபார்மை, காதலிக்கு கொடுத்தனுப்பியுள்ளார்.

ஆனால் இதனை போலீஸார் கண்டுபிடித்ததுடன் பெண் இன்ஸ்பெக்டரின் கணவரையும், போலீஸ் யுனிஃபார்மில் கொள்ளையடிக்கச் சென்ற அவரது காதலியையும் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.