உணவாக 2 நாட்களுக்கு ஒரு பனிஸ் மட்டுமே கொடுக்கப்பட்டு குவைத்தில் சித்திரவதைக்குள்ளான மாரிமுத்து சுலோச்சனா

0
173

இரண்டு நாட்களுக்கு ஒரு பனிஸ் மாத்திரமே உண்பதற்கு  கொடுக்கப்பட்டதுடன் தினமும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் குவைத்தில் பணிப் பெண்ணாகப் பணி புரிந்த  ஒருவர்  ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.

அணிந்திருந்த ஆடையுடன் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ள இவரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளது.

குறித்த பெண் எஹெலியகொட பிரசேத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தயான 49 வயதுடைய மாரிமுத்து சுலோச்சனா என்பவராவார்.

இவர் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் அவர்களின் திருமணச் செலவுக்கு பணத்தைத் தேடிக் கொள்வதற்குமாகவும் கொள்வதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்னர் குவைத்துக்கு வீட்டு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.

sdr
sdr

குவைத் நாட்டில் சாரா என்ற பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்கே இவர் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.

அங்கு குறித்த ஆசிரியரின் மனைவியால் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை பனிஸ் மாத்திரமே உணவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடுமையான சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதிக பசி ஏற்படும் பட்சத்தில் மேலதிகமாக உணவு கேட்கும் போது குறித்த பெண் சுலோசனாவை பாதணிகளால் தாக்கியுள்ளார்.

இவ்வாறு தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் சுலோச்சனாவின் உடல் முழுவதும் உள்ளன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.