வவுனியாவில் கோர விபத்து ; நால்வர் படுகாயம்

0
94

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (14.07) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து மன்னார் வீதிய்யூடாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மன்னார் வீதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதுடன் வீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவரையும் மோதி தள்ளியுள்ளது.

IMG20190714222155

இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளதுடன் இரு மோட்டார் சைக்கிளிலும் பயணித்துக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

IMG20190714222347

விபத்து இடம்பெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் வவுனியா – மன்னார் பிரதான வீதி பகுதியில் விபத்துக்கு காரணமாகவிருந்த மோட்டார் சைக்கிலினை போக்குவரத்து பொலிஸார் மறித்த சமயத்தில் பொலிஸாரின் தடுப்பினை மீறி பயணித்ததாக சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் தெரிவித்ததுடன்,

IMG20190714223520

பொலிஸாரின் தடுப்பினை மீறி பயணித்ததன் காரணமாகவே இவர்கள் அதிவேகமாக பயணித்திருக்கலாம் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.