தீ காயங்களுடன் குற்றுயிராய் கிடந்த கணவனும் மனைவியும்..! வவுனியாவில் சம்பவம்

0
99

வவுனியா பொதுமண்டப வீதி 1ம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து தீக்காய ங்களுக்கு உள்ளாகிய நிலையில் காணப்பட்ட கணவன் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (12.07.2019) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறித்த வீட்டில் கத றல் சத்தம் கேட்டுள்ளது.

அதனையடுத்து அயலவர்கள் வீட்டின் கதவினையுடைத்துக்கொண்டு உள்ளே சென்ற சமயத்தில் வீடு முழுவதும் மண்ணெண்ணய் ஊற்றிக்காணப்பட்டதுடன் அவர்கள் தீப் பற்றிய நிலையில் காணப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் அயவர்கள் கணவன் மனைவியான இருவரையும் மீட்டெடுத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

29 வயதுடைய கணவன் மற்றும் 27 வயதுடைய மனைவி ஆகிய இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கை, கால், நெஞ்சு ஆகியபகுதிகளில் தீக்காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

20190712_09123520190712_091250

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.