‘ரசிகர்களை உருக வைத்த’…’தோனி’யின் ரன் அவுட்’… ஆனா… வைரலாகும் வீடியோ

0
311

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. நேற்று முன் தினம் நடந்த இந்தப்போட்டியில் மழை குறுக்கிட்டதால், மீதமுள்ள ஆட்டம் நேற்று நடந்தது.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு 240 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தது.

இதையடுத்து களமிறங்கிய ஜடேஜா, தோனி ஜோடி கடுமையான போராட்டம் நடத்திய போதும் இந்திய அணியால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை.

இதனிடையே தோனியின் ரன் அவுட் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அவர் தனது விக்கெட்டை இழந்த போது இந்திய ரசிகர்களின் இதயமே நொறுங்கியது என கூறும் அளவிற்கு ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினார்கள்.

தோனி அவுட் ஆனபோது மைதானத்தில் இருந்த அவரது மனைவி மற்றும் ரசிகர்கள் முதற்கொண்டு பலரும் துக்கம் தாளாமல் கண்ணீர் வடித்தார்கள்.

இது தோனி மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பை காட்டுவதாக பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Voir cette publication sur Instagram

Heart broken… Still crying 😓😓… #teamindia #msd #virat #rohit #worldcup #2019

Une publication partagée par 🖤 Insta_bgm_songs🖤||2k|| (@insta_bgm_songs) le

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.