இசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ள கிளி.. இணையத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய காட்சி..! – (வீடியோ)

0
119

காக்கட்டூ கிளி வகைகளில், `ஸ்னோபால் (Snowball)’ இனம், மனிதர்களைப்போன்று நடனமாடக்கூடிய தன்மையுடையது.

2007-ம் ஆண்டில், இதன் நடனம் யூடியூப் ஹிட்லிஸ்டில் டாப் இடத்தைப் பிடித்தது. தற்போது, 14 விதமான நடன அசைவுகளைச் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது..

இந்த சல்ஃபர் கொண்டையுடைய கிளி, 2007-ம் ஆண்டு Backstreet Boys குழுவின் `Everybody’ எனும் ஆல்பத்தின் பாடலுக்கு நடன அசைவுகள் செய்து இணையத்தைத் தன் வசமாக்கிக்கொண்டது.

பத்தாண்டுகளாக இக்கிளியின் அசைவுகளையும், நளினங்களையும் படித்த ஆராய்ச்சியாளர்கள், கிளிகள் மற்றும் மனிதர்களுக்கு இயற்கையிலேயே இசையைக் கேட்டால் நடனமாடும் தன்மை இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இசைக்கு ஏற்றதுபோல் 14 விதமான தனிப்பட்ட நடன அசைவுகளைச் செய்து தற்போது அனைவரையும் ஈர்த்துள்ளது இந்த ஸ்னோபால்.

சிலவகைப் பறவைகள் அதிநவீன அறிவாற்றல் மற்றும் படைப்பாற்றல் திறன் கொண்டவை என்பதற்கு இது மிகச் சிறந்த ஆதாரமாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

2009-ம் ஆண்டு நடைபெற்ற ஆய்வு ஒன்றில், ஸ்னோபால் கிளிகளை மற்ற விலங்குகளுடன் ஒப்பிடும்போது ஒரு மேம்பட்ட இசை துடிப்பு உணர்வைக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தனர்.

ஆனாலும், அவை தன் உரிமையாளரின் நடன அசைவுகளைப் பின்பற்றுகிறதா அல்லது வெவ்வேறு டெம்போக்களுக்கு ஏற்றவாறு தன் உடலை அசைக்கிறதா என்பதை முழுமையாகக் கண்டுபிடிக்க முடியாமல் திணறினர்.

இந்த ஆய்வு முடிந்த பிறகே, ஸ்னோபால் கிளியின் உரிமையாளர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த Irena Schulz, தன் பறவை இசைக்கு ஏற்றவாறு புதிய நடன அசைவுகளை உருவாக்குகிறது என்று பதிவுசெய்தார்.

இதைத் தொடர்ந்து அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.

அதன் முடிவாக, இரண்டு காம்பினேஷன்களில் பாடி ரோல், சைடு டூ சைடு, டவுன் ஷேக், foot lift முதலிய 14 நடன அசைவுகளைச் செய்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அதில், பெரும்பாலானவை கீழ்நோக்கி நகரும் அசைவுகளாம்.

பொதுவாகவே, பறவைகள் மனிதர்களிடமிருந்து ஐந்து பண்புகளைப் பகிர்ந்துகொள்கின்றன.

இதுவே, மனிதர்களின் தொனியைப் பின்பற்ற அவற்றுக்கு எளிதாக உள்ளது.

அந்த வகையில், தற்போது இசைக்கேற்றபடி மனிதர்களைப்போன்றே நடனமாடும் இந்த ஸ்னோபால் கிளிகள்தான் இணையத்தின் இப்போது வைரலாகி வருகிறது..

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.