நடிகர் விஜயகுமாரும் மகள் வனிதாவும் இடையே நடந்த அதிதீவிர இழிபறி சண்டை!! நடந்தது என்ன?? (அதிர்ச்சி காணொளி)

0
183

கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து வனிதா திருமணம் செய்து கொண்டார்.

அவர்கள் திருமணம் முடித்த ஓர் ஆண்டிலேயே ஒரு மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

இதற்கு பின்னர் வனிதாவின் மகனை ஆகாஷ் தான் வளர்த்து வந்தார். அதற்கு வனிதாவின் தந்தை விஜயகுமாரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் வனிதாவின் மகன் அவரது தாத்தாவான விஜயகுமாரிடம் தான் வளர்ந்து வந்தார்.

இந்த நிலையில் தனது மகனை தன்னுடன் அழைத்து செல்ல விஜயகுமாரிடம் வனிதா சண்டையிட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அந்த விடியோவில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி, நான் உன்னுடன் வர விரும்பவில்லை என்று கூறுகிறார். ஆனால், வனிதாவோ ‘அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்று கூறிவிட்டு எனக்கு சிறுவனை இழுக்கின்றார்.

ஒரு கட்டத்தில் விஜயகுமார் மற்றும் வனிதா அந்த சிறுவனுக்காக சண்டை போடா இறுதியில் வனிதா, அந்த சிறுவனின் கழுத்தை பிடித்து இழுக்கின்றார்.

மகன் நான் வர வில்லை, என்று கதறி அழுகின்றார். சிறுவனை அப்போதும் விட வில்லை.

அருகில் இருந்தவர்கள் குழந்தையின் கழுத்தை நெருக்குகிறீர்களே என்று கூறியும் வனிதா அதனை காதில் வாங்காமல் மகனை இழுக்கின்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.