ரம்யா உடன் லிப் லாக் அடித்த அமலா பால்- “ஆடை” படத்தின் சர்ச்சைக்குரிய படம் இதோ

0
453

அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ஆடை”. இப்படம் தொடர்பான விஷயங்கள் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

அதில் ஆடையின்றி அமலா பால் நடித்த காட்சிகள் இடம்பெற்று, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ஆடைகளில் அமலா பால் தோன்றும் வகையில் போஸ்டர்கள் வெளியாகின.

பின்னர் ”ஆடை” படத்தின் டிரைலரை பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது டுவிட்டர் பக்கம் மூலம் வெளியிட்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த டிரைலரில் இடம்பெற்ற ஒரு காட்சி அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. அதில், வி ஜே ரம்யா மற்றும் அமலா பால் இருவரும் லிப் லாக்கில் இருக்கின்றனர்.

இதுதொடர்பாக இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இம்மாதத்தில் ”ஆடை” வெளியாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

முன்னதாக ”ஆடை” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அமலா பால், தான் திரையுலகை விட்டு விலகிச் செல்ல நினைத்ததாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் “ஆடை” படம் தன் முடிவை மாற்றிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.