மனைவியைக் குத்திக் கொன்றுவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்

0
191

தனது மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் மஹி­யங்­க­னை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இரண்டரை வருட காலம் வெளிநாட்டில் வேலைசெய்து விட்டு நாடு திரும்பிய தனது மனைவியுடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்ட கணவன் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு மஹி­யங்­க­னை ஹசலக்க பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய மனைவி நேரடியாக கம்பளை உள்ள அவரது தாயாரின்  வீட்டிற்குச் சென்று ஒரு வாரம் கழிந்த பின்னரே கணவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்  ஏற்பட்ட வாக்குவாதமே இறுதியில் கொலையில் முடிந்துள்ளது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மஹி­யங்­க­னை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.