ஆச்சரியம்! முயலை முழுமையாக விழுங்கும் கடற்பறவை!! – (வீடியோ)

0
322

இயற்கையில் நடக்கும் எல்லாமே விநோதம்தான். அதன் ஒவ்வொரு கணத்திலும் ஒரு அற்புதம் கட்டவிழ்க்கப்படும். இது வைல்டு லைஃப் போட்டோகிராபர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பரிசு.

பிரிஸ்டலின் இயற்கை மற்றும் கடல்சார்ந்த புகைப்படக் கலைஞரான 28 வயதுடைய ஐரின் மெண்டீஸ் க்ரூஸ் ஸ்கோஹ்லாமின் வேல்ஸ் தீவுப்பகுதியில், ஒரு அரிய நிகழ்வை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ வைல்டு லைஃப் புகைப்பட உலகில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

vathuuu

அந்த வீடியோவில், கடற்பறவை ஒன்று ஒரு முழு முயலையும் இரையாக தனது வாயில் கவ்விக்கொண்டு வலம் வருகிறது.

அது, தன் வாயில் வைத்திருக்கும் முயலை, முழு ஆஃப் பாயிலை முட்டைப் பிரியர் ஒருவர் விழுங்குவது போல், விழுங்க முயற்சிக்கிறது.

முன்னதாக முயல் தனது இரையைத் தின்று முடிக்கும் வரை, இந்த கடற்பறவை, அசையாமல், முயலின் பின்னால்‘ஓடு மீன் ஓட, உறுமீன் வர, காத்திருக்குமாம் கொக்கு’ என்கிற கணக்காய் வெயிட் பண்ணி பார்க்கிறது.

முயல் நன்றாக சாப்பிட்ட பின், அதன் மீது ஒரு கொத்து கொத்தி, லபக்கென ஒரே வாயில் விழுங்கிக் கொண்டு உண்டது செரிக்கிறதா என்று ஒரு கணம் யோசிக்கிறது.

இந்த வீடியோ, இணையத்தில் பதிவிடப்பட்டதை அடுத்து பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது இந்த கடற்பறவையின் செயல்.

LEAVE A REPLY

*