5 முறை சாம்பியன் வில்லியம்சை வீழ்த்திய 15 வயது சிறுமி ‘கோகோ’!

0
150

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் 5 முறை சாம்பியன் வீனஸ் வில்லியம்சை 15-வயது சிறுமி தோற்கடித்த சம்பவம் டென்னிஸ் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறினார் வீனஸ் வில்லியம்ஸ்.

இந்த முறை வீனஸை தோற்கடித்தவர் 15 வயது சிறுமி காரி கோகோ காஃப் என்பதுதான் ஆச்சர்ய செய்தி.

AP19182650606188_1_10143

விம்பிள்டன் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனைகளான 39 வயது வீனஸ் வில்லியம்ஸ் , 15 வயது காஃபுடன் மோதினார்.

முதல் செட் முதலே ஆக்ரோஷம் காட்டிய காஃப் வீனஸை 6-4, 6-4 என்று நேரடி செட் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். விம்பிள்டன் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற மிக இள வயது வீராங்கனை என்ற பெருமை காஃபுக்கு உண்டு.

cafu-1_10242

ஜூனியர் தொடர்களில் காஃபு காட்டிய திறமையின் அடிப்படையில் விம்பிள்டன் போட்டிக்கு வைல்டு கார்டு மூலம் தகுதி பெற்றார்.

மற்றொரு கிராண்ட் ஸ்லாம் தொடரான யு.எஸ் ஓபன் ஜூனியர் பிரிவில் 13 வயதிலேயே பட்டம் வென்ற பெருமையும் காஃபுக்கு உண்டு.

செரினாவுக்குப் பயிற்சி அளித்த பேட்ரிக் மோட்ராடோகோலோ இவருக்கும் பயிற்சி அளித்து வருகிறார். பிரான்ஸின் நீஸ் நகரில் உள்ள இவரின் டென்னிஸ் அகாடமியில்தான் காஃபு பயிற்சி பெற்றுவருகிறார்.

வெற்றி பெற்றது குறித்து காஃபு கூறுகையில்,“வழக்கமாகப் போட்டியில் தோற்றால்தான் நான் அழுவேன். இந்த முறை வெற்றி பெற்றதற்காக அழுதிருக்கிறேன்.

நண்பர்கள், உ றவினர்கள் வாழ்த்து மழையில் நனைந்திருக்கிறேன். விம்பிள்டன் நம்பர் 1 கோர்ட்டில் விளையாட வேண்டுமென்பது என் கனவு. அது, தற்போது நிறைவேறியிருக்கிறது என்றார். வீனஸை தோற்கடித்த காஃபுவுக்கு ரோல் மாடல் செரினா என்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.