‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு

0
251

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் டரம்ப் பங்­கு­பற்றும் முக்­கிய மாநா­டுகள், சந்­திப்­பு­களில், அவரின் மகள்­மாரில் ஒரு­வ­ரான இவான்கா ட்ரம்ப்பும் பங்­கு­பற்­று­வது குறித்து, கணி­ச­மான அமெ­ரிக்­கர்­களின் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளனர்.

UnwantedIvanka1ஜனா­தி­பதி ட்ரம்பின் 5 பிள்­ளை­களில் இரண்­டா­மவர் இவான்கா ட்ரம்ப். 37 வய­தான இவான்கா ட்ரம்ப், வர்த்தகர், பெஷன் டிஷைனர், எழுத்­தாளர், ரியா­லிட்டி ரீ.வி. நட்­சத்­திரம் என பல முகங்­களைக் கொண்­டவர். 

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக டொனால்ட் டரம்ப் பத­வி­ யேற்ற பின்னர், அவரின் ஆலோ­சகர்­களில் ஒரு­வ­ராக இவான்கா ட்ரம்ப் நிய­மிக்­கப்­பட்டார்.

UnwantedIvanka-2ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் கலந்­து­கொ­ள்ளும் முக்­கிய சந்­திப்­பு­களில் இவான்கா ட்ரம்ப், அவரின் கணவர் ஜெராட் குஷ்னர் ஆகி­யோரும் கலந்­து­கொள்­கின்­றனர்.  இதற்கு கணி­ச­மானோர் எதிர்ப்புத் தெரி­வித்து வந்­தனர். அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற ஜன­நா­யகக் கட்சி உறுப்­பி­ன­ரான அலெக்­ஸாண்ட்­ரியா கோர்ட்டஸ் உட்­பட பலர், இவான்கா ட்ரம்ப் குறித்து விமர்­ச­னங்­களை வெளிட்டு வந்தனர்.

UnwantedIvanka-4அண்­மையில் ஜப்­பானின் ஒசாகா நகரில் நடை­பெற்ற ஜி.20 உச்சி மாநாட்டில் உலகின் முக்­கிய நாடு­களின் தலை­வர்­க­ளுக்கு மத்­தியில் இவான்கா ட்ரம்ப்பும் காணப்­பட்­டமை பல­ருக்கும் வியப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­நி­லையில், தேவை­யில்­லாத இவான்கா எனும் அர்த்தத்தில் #UnwantedIvanka எனும் ஹேஷ்டெக் சகிதம் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்டு வரு­கி­றது.

unwanted-ivankaஅனைத்து நிகழ்­வு­க­ளிலும் தான் இருப்­பதைக் காட்­டிக்­கொள்ள இவான்கா ட்ரம்ப் விரும்­பு­கிறார் என சித்­த­ரித்து, வர­லாற்றுப் பிர­சித்தி பெற்ற நிகழ்­வு­களின் புகைப்­ப­டங்­களில் இவான்கா ட்ரம்ப்பின் படத்­தையும் இணைத்து, #UnwantedIvanka எனும் ஹேஷ்­டெக்­குடன் பலர் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யிட்டு வரு­கின்­றனர் நெட்­டி­சன்கள்.

நெட்டிசன்களின் கற்பனையில்…

reagan-gorbachev-8றீகன், கொர்பசேவ்
Titanic-unwanted-ivanka
unwanted-ivanka-5
yalta-ivanka-9
unwanted-ivanka-7

 

LEAVE A REPLY

*