கைதியுடன் ஆட்டம்போடும் கேரளக் காவலர்கள்! – வைரலான டிக் டாக் வீடியோ

0
168

கேரளாவில் கைதி ஒருவருடன், போலீஸார் டிக் டாக் வீடியோவை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

yyyyyy_17261

டிக் டாக் வீடியோவால் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, குடும்பத்துடனும் இணைந்தும்கூட, வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

வீடியோக்களில் ஆபாசக்காட்சிகள் அதிகம் இடம்பெறுவதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைக் கருத்தில்கொண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை டிக் டாக் செயலியைத் தடை செய்வதாக அறிவித்தது.

பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டது. அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த காவலர்கள் சிலர், பணி நேரத்தில் கைதி ஒருவருடன் இணைந்து டிக் டாக் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில், `3 காவல் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்புறம், காவல்துறை வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காவலர்கள் அழைத்து வந்த கைதி ஒருவர் ஆடுகிறார். இதைப் பார்த்தும் பார்க்காதுபோல் இருக்கும் காவலர்கள், கைதியை மிரட்டும் தொனியில் சைகை செய்கின்றனர்.

சில நொடிகளுக்குப் பின் அவர்களும் காவலர்களுடன் இணைந்து நடனம் ஆடுகின்றனர். மலையாள பாட்டு ஒன்று ஒலிக்க, மூன்று காவலர்கள் ஒரு கைதி ஜாலியாக ஆடும் வீடியோ’ வெளியாகியுள்ளது.

பணி நேரத்தின்போது, காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.