அறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட மணிமேகலை

0
326
சென்னை: அறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்திருந்த வீடியோவை டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான மணிமேகலைக்கு ட்விட்டரில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.
இந்நிலையில் அவர் விஜய் தொலைக்காட்சி பிரபலமான அறந்தாங்கி நிஷா பற்றிய வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

வீடியோவை வெளியிட்டு மணிமேகலை கூறியிருப்பதாவது, அவமானத்துக்கு பயந்து நிஷா அக்கா ரொம்ப நாளா ஒளிச்சு வச்சிருந்த வீடியோ, எக்ஸ்க்ளூசிவாக உங்களுக்காக இதோ என்று தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் மணிமேகலையும், நிஷாவும் சேர்ந்து மொச்சைகொட்டை பல்லழகி முத்து முத்து சொல்லழகி பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார்கள். இருவரும் ஒரு பெஞ்ச் மீது ஏறி ஆட நிஷா கால் தவறி கீழே விழுகிறார்.

ஆர்வக்கோளாறில் ஆடி பொத்தென்று விழுந்தது யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று நிஷா அக்கா பத்திரமாக வைத்திருந்த வீடியோவை மணிமேகலை இப்படி வெளியிட்டு மானத்தை வாங்கிவிட்டாரே.
மணிமேகலை உங்களை பார்த்தால் அநியாயத்திற்கு நல்ல பொண்ணு மாதிரி இருக்கிறீர்கள்.
ஆனால் வீடியோவை பார்த்தால் சேட்டைக்காரி என்று தெரிகிறதே. மணிமேகலை வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்களோ, அக்கா, அறந்தாங்கி நிஷாவை பங்கம் செய்துவிட்டீர்கள், ஊரை கூட்டி இப்படி அசிங்கப்படுத்திவிட்டீர்களே, கூட இருந்தே குழி பறிச்சுட்டியேம்மா இந்த பாவம் ஒன்ன சும்மா விடாது என்று தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் மணிமேகலையும் அவரின் கணவர் ஹுசைனும் கலந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

க்யூட் ஜோடியான அவர்களை பிக் பாஸ் வீட்டில் பார்க்க ஆசையாம். என்ன ஒரு வில்லங்கமான ஆசை?

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.