பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

0
152
மான்செஸ்டரில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தவானுக்குப் பதில் விஜய் சங்கர் இடம்பிடித்தார்.

ரோகித் சர்மா (140), லோகேஷ் ராகுல் (57), விராட் கோலி (71 மழையின்போது ஆட்டம் நிறுத்தப்பட்டபோது எடுத்த ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 46.4 ஓவரில் 305 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

201906161932581172_Match-start-again-India-337-runs-target-to-Pakistan-won_SECVPF.gifசுமார் அரைமணி நேரம் கழித்து மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலி 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மழைக்குப்பின் இந்தியா விளையாடி 20 பந்தில் 31 ரன்கள் எடுக்க ஒட்டுமொத்தமாக 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது.

விஜய் சங்கர் 15 பந்தில் 15 ரன்கள் எடுத்தும், கேதர் ஜாதவ் 8 பந்தில் 9 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதனால் பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

 இந்தியா Vs பாகிஸ்தான்: 140 ரன்கள், 14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் – அவுட்டானார் ரோகித் ஷர்மா

113 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 140 ரன்கள் எடுத்து அவுட்டானார் ரோகித் ஷர்மா

ஹசன் அலி பந்துவீச்சில் வஹாப் கேட்ச் பிடிக்க அவர் அவுட் ஆனார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து விளாசினார் ரோகித் சர்மா

201906161718199949_Rohit-Sharma-completes-century-in-85-balls-against-Pakistan_SECVPF.gifஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ரோகித் சர்மா சதம் அடித்து விளாசினார்
மான்செஸ்டர், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் இந்தியா-பாகிஸ்தான்  அணிகள் மோதும் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில்  பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ரோகித் சர்மா சதம் அடித்து விளாசினார்.
85 பந்துகளில் 3 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் ரோகித் சர்மா சதம் விளாசினார்.  நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் ரோகித் சர்மா அடிக்கும் 2-வது சதம் இதுவாகும்.
ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  இதுவரை இவர், 330 போட்டியில், 357 சிக்சர் தெறிக்கவிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (டெஸ்ட், ஒருநாள், சர்வதேச ‘டுவென்டி-20’) அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை (355 சிக்சர்) முந்தி முதலிடம் பிடித்தார் ரோகித் சர்மா.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.