‘போங்க சார்’… ‘வரிசையில வாங்க’… அதிர்ச்சியடைந்த ‘சந்திரபாபு நாயுடு’… பரபரப்பு சம்பவம்!

0
203

தெலுங்கு தேச கட்சியின் தலைவரும்,ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு, விமானநிலையத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்க பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், அமோக வெற்றியினை பெற்றது.

இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். இதனிடையே கட்சி உறுப்பினர்கள் உடனான சந்திப்பை முடித்து விட்டு,நேற்று இரவு சந்திரபாபு நாயுடு விஜயவாடா விமான நிலையத்துக்கு வந்தார்.

சந்திரபாபு நாயுடுக்கு மாவோயிஸ்ட் அச்சுறுத்தல்கள் இருப்பதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அவருடன் என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு படையினை சேர்ந்த கமாண்டோ வீரர்கள் எப்போதும் இருப்பார்கள்.

இந்நிலையில் விமான நிலையம் வந்த அவர்,இசட்பிளஸ் பாதுகாப்பில் இருப்பதால் நேரடியாக வி.ஐ.பி.க்கள் வாகனத்தில் ஏறி விமானத்துக்கு செல்ல முயன்றார்.

ஆனால் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்கள். பாதுகாப்பு சோதனைக்கு ஒத்துழைக்குமாறு அவரை கேட்டு கொண்டார்கள்.

இதையடுத்து சந்திரபாபு நாயுடு பயணிகளோடு பயணியாக வரிசையில் நின்று, ஸ்கேன் கருவியை கடந்து சென்றார்.அவரை பாதுகாப்பு அதிகாரி சோதனை செய்தார்.

இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து விமானம் நிற்கும் இடம் வரை விஐபி வாகனத்தில் செல்ல அனுமதி கேட்டார்.

ஆனால் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு பேருந்தில் செல்லுமாறு அதிகாரிகள் கூறினார்கள்.

இதனால் சந்திரபாபு நாயுடுவும் விமான நிலையத்தின் பேருந்தில் ஏறி சென்றார்.

இதனால் விமன நிலைத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் தெலுங்கு தேசம் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.