ஆலய உற்சவத்தில் தங்கச்சங்கிலி அறுத்த ஆறு பெண்கள் கைது;நாவலப்பிட்டியில் சம்பவம்

0
133

நாவலப்பிட்டி கடியஞ்சேனை தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விஷேட பூஜைகள் நேற்று இடம்பெற்று கொண்டிருந்தபோது பெண் ஒருவரின் தங்கச்சங்கிலியை
அறுத்த ஆறு பெண்கள் நாவலப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆலய கும்பாபிஷேகம் இடம்பெற்று கொண்டிருந்த சமயம் ஆலயத்தில் உள் உட்புகுந்த ஆறு சந்தேகத்திற்கு இடமான பெண்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதை பாசாங்கு காட்டி வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவரின் தங்கமாலையை அறுக்க முயன்றுள்ளனர்.

குறித்த பெண் கூச்சலிட்டதை அடுத்து ஆலயத்தினுள் வந்த பொலிஸார் சந்தேநபர்களான இந்த பெண்களை கைது செய்துள்ளதோடு தங்மாலையையும் மீட்டுள்ளனர்.

இந்த ஆறு பெண்களும் ஆலயங்களில் இடம்பெறுகின்ற விஷேட பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகங்கள் இடம்பெறும் பிரதேசங்களுக்கு குழுவாக சென்று பக்தஅடியாரிகளின் தங்கமாலைகளை களவாடுவதில் நீண்டகாலமாக ஈடுபட்டுவந்துள்ளதாகவும் குறித்த இந்த ஆறு பெண்களும் வாழைச்சேனை, புத்தளம்,சிலாபம் , வத்தேகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

64141643_2308814756038434_8216000647422541824_oPhoto__4_62487223_2308814729371770_3896513108251770880_o

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.