யாழ்.கொக்குவில் கிழக்கை சேர்ந்த விபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்

0
144

விபத்தில் படுகாயமடைமந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இளைஞனை அவரது பெற்றோர் இன்று சனிக்கிழமை அடையாளம் காட்டினர்.

கொக்குவில் கிழக்கு சேர்ச் லேனைச் சேர்ந்த தர்மானந்தசிவம் நித்திலன் (வயது 19) என்பவேர உயிரிழந்தார் என்று அவரது தந்தை தர்மானந்தசிவம் இன்று யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் அடையாளம் காட்டினார்.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் 19 வயதுடைய இளைஞரை யாழ்ப்பாணம் போதனவைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

nithilannஅவரை வைத்தியசாலையில் அனுமதித்தவர் தகவல் எதனையும் வழங்காமல் அங்கி்ருந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் முழுமையாக சுயநினைவற்ற நிலையில் தனது பெயரை மித்திரன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சத்திரசிகிச்சைக்காக சத்திரசிகிச்சை கூடத்துக்கு கொண்டு சென்றவேளை அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரை அடையாளம் காணஉதவுமாறு கோரப்பட்டிருந்தது.

இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்த அவரது பெற்றோர் மகனின் சடலத்தை அடையாளம் காட்டினர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பதுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார் என்று இறப்பு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் உடற் பரிசோதனையின் பின் சடலத்தை தந்தையாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.