ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை

0
110

இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான தளவாடங்களை அதிநவீன தொழில்நுட்பத்துடன் வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது;

ஆனால், ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணை இந்தியா வாங்குவதால், பாதுகாப்புத் துறையில் அந்நாட்டுக்கு அளித்து வரும் ஒத்துழைப்பு குறையும்’ என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ரஷியாவிடம் இருந்து 500 கோடி டாலர் செலவில் (இந்திய மதிப்பில் ரூ.3.49 லட்சம் கோடி) எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

நிலத்தில் இருந்து வானில் நெடுந்தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து அண்டை நாடான சீனா கடந்த 2014-ஆம் ஆண்டிலேயே வாங்கி விட்டது.

Alice-Wells

Alice-Wells.j

இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான மூத்த அதிகாரி ஆலிஸ் ஜி.வெல்ஸிடம் அந்நாட்டு நாடாளுமன்றக் குழு கேள்வி எழுப்பியது. அதற்கு அவர் அளித்த பதில்:

பாதுகாப்புத் துறையில் மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கு அமெரிக்கா அதிக அளவில் ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

அதிபர் டிரம்ப்பின் ஆட்சியில், இந்தியாவின் ஆயுதத் தேவையை பூர்த்தி செய்வதற்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது. மேலும், பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய கூட்டாளி என்ற அந்தஸ்தையும் பெறுவதற்கு அமெரிக்கா விரும்புகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அளவுக்கு இந்தியாவுக்கு ஆயுதங்களை வழங்கும் நிலையில் அமெரிக்கா இல்லை. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது.

பாதுகாப்புத் துறையில் உறவுகளை வலுப்படுத்துவதற்காக, இந்தியாவுடன் பல முறை அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

ஆனால், பல ஆண்டுகளாகவே இந்தியா தனது ராணுவத் தேவைக்கு ரஷியாவையே நம்பியுள்ளது. மேலும், ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை இந்தியா வாங்கவுள்ளது.

இதனால், பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஒத்துழைப்பு குறையும். மேலும், பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதும் குறையும் என்றார் ஆலிஸ் ஜி.வெல்ஸ்.

_103731495_62f97e90-3f53-4901-a74d-49ae3e7b9940S 400 ரக ஏவுகணைகள் எவ்வாறு செயல்படும்?

  1. தொலை தூர கண்காணிப்பு ரேடார்கள், பொருட்களை கண்காணிப்பதோடு, தகவல்களை கட்டளை வாகனத்திற்கு அனுப்பும். அதனை வைத்து கட்டளை வாகனம் இலக்குகளை மதிப்பீடு செய்யும்.
  2. இலக்கை அடையாளம் கண்டவுடன், கட்டளை வாகனங்கள் ஏவுகணைகளை செலுத்தும்.
  3. ஏவுதல் தொடர்பான தரவுகள் ஏவு வாகனத்துக்கு அனுப்பப்பட்டு, வானில் ஏவுகணைகள் செலுத்தப்படும்.
  4. மற்றொரு ரேடார், ஏவுகணைகள் இலக்கை நோக்கி பயனிக்க உதவி செய்யும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.